• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாமாவால் தான் உதவ முடியும்... பாரதியை சந்தித்த கண்ணம்மா!

மாமாவால் தான் உதவ முடியும்... பாரதியை சந்தித்த கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

இவ்வளவு தூரம் வந்ததுக்கு முதலில் பாரதிக்கு நன்றி கூறுகிறாள் கண்ணம்மா.

  • Share this:
    பாரதி மாமாவால் தான் உதவ முடியும் என முடிவெடுத்த கண்ணம்மா, கடைசியில் பாரதியை நேரில் சந்தித்து பேசுகிறார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த ட்விஸ்டாக பாரதியை நேரில் அழைத்து பேசுகிறார் கண்ணம்மா. கண்டிப்பாக இந்த ட்விஸ்டை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தொலைந்து போன குழந்தையை காப்பாற்ற கண்ணம்மா இந்த முடிவை எடுக்கிறாள். இந்த சீன்கள் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளன. கண்ணம்மாவுக்கு தொலைந்து போன குழந்தை எங்கே இருக்கிறாள்? என்ற கேள்வி விடாமல் துரத்துகிறது. போதாத குறைக்கு வெண்பா தொல்லை வேற, இதனால் மன நிம்மதி இல்லாமல் தவிக்கும் கண்ணம்மா, கடைசியாக ஒரு முடிவை எடுக்கிறாள். பாரதியை தவிர இந்த விஷயத்தில் வேற யாராலும் உதவ முடியாது என முடிவு எடுக்கிறாள். அதனால் பாரதிக்கு ஃபோன் செய்து உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்கிறாள். ஆரம்பத்தில் கண்ணம்மாவிடம் இருந்து ஃபோனா? என சலித்து கொண்டு ஃபோனை எடுத்த பாரதி, கடைசியில் கண்ணம்மாவை பார்க்க சம்மத்திக்கிறான்.

    அதே இடம்.. அதே நினைவுகள்.. கண்ணம்மா, மாசமாக இருப்பதை பாரதியிடன் சொன்ன அதே இடத்தில் இருவரும் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து பேசுகிறார்கள். இருவரின் மனதிலும் அந்த நினைவுகள் ஓடுகின்றன. கண்ணம்மாவே பாரதியிடம் போய் பேசுகிறாள். இவ்வளவு தூரம் வந்ததுக்கு முதலில் பாரதிக்கு நன்றியும் கூறுகிறாள். மாறி மாறி இருவரும் பழைய நினைவுகளை தூசி கிளருவது போல் பேசுகின்றனர்.

    இந்த பக்கம் உடம்பு சரியில்லாத வேணுவை பார்க்க வெண்பா, பாரதி வீட்டுக்கு வருகிறாள். ஒழுங்கா வந்து வேணுவை நலம் விசாரித்து போய் இருந்தால் பிரச்சனை முடிந்து போயிருக்கும். அதை விட்டுட்டு சவுந்தர்யா, அகில், அஞ்சலி, வேணு என மொத்த குடும்பமும் பாரதி - கண்ணம்மா சேர வேண்டும் என பேசி கொண்டிருப்பதை ஒட்டு கேட்கிறாள். அதற்குள் வெண்பா நின்று கொண்டிருப்பதை சவுந்தர்யா கவனிக்க, ஒட்டு மொத்த குடும்பத்திடமும் வெண்பா மாட்டிக் கொண்டு அசிங்கப்படுகிறாள். போதாத குறைக்கு வெண்பாவை, ரோஷம் இல்லாத ஜென்மம் என்று சவுந்தர்யா குத்தி காட்டி பேச, கடுப்பாகிறாள் வெண்பா. திட்டிக் கொண்டே அங்கிருந்து கிளப்புகிறாள்.

    மறுபடியும் பாரதியும் கண்ணம்மாவும் பேசுகிறார்கள். பாரதியின் நல்ல குணங்களை கண்ணம்மா எடுத்துக்காட்ட, பாரதியோ பழைய சுத்தமான கண்ணம்மா தான் நல்லவள் என சொல்கிறான். ஆனாலும் கண்ணம்மா குழந்தைக்காக அமைதியாக நிற்கிறாள். சரி விஷயத்துக்கு வா, எதுக்கு வர சொன்ன? அப்படின்னு பாரதி கேட்க, கண்ணம்மா நம்ம குழந்தையை காணோம் என்கிறாள். என்னது நம்ம குழந்தையா? அப்படின்னு பாரதி நக்கலா சிரிக்க, கண்ணம்மா, என் குழந்தையை காணோம். யாரோ கடத்திட்டாங்கன்னு சொல்கிறாள். அடுத்து என்ன நடக்கும் என்பது நாளைக்கு தான் தெரியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: