Home /News /entertainment /

காற்றுக்கென்ன வேலி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

காற்றுக்கென்ன வேலி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி சீரியல் ஆனது, மதிய நேரத்தில் ஒளிபரப்பப்படும் விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக மாறி உள்ளது.

    சில தினங்களுக்கு முன் "விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் 2022 நிகழ்ச்சி நடந்த இடத்தில் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலுக்கென ஒரு பேனர் கூட வைக்கப்படவில்லை, சீரியலில் நடித்த ஒருவருக்கும் எந்த விருதும் கிடைக்கவில்லை, விருதுகளை தேர்வு செய்யும் நடுவர் குழு பாரபட்சமானது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த நடிகை ஷியமளா, தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஆனது, விஜய் டிவியின் நம்பர் 1 மதிய நேர சீரியல் ஆக மாறிய போஸ்டரை பகிர்ந்துள்ளார்!

    ஆம்! வெளியான டெலிவிஷன் ரேட்டிங்கின் படி (TVR) காற்றுக்கென்ன வேலி சீரியல், விஜய் டிவியின் நம்பர் 1 மதிய நேர சீரியலாக உருமாறியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் ஆனது சில காரணங்களுக்காக மதிய நேர ஸ்லாட்டிற்கு தள்ளப்பட்டது. அந்த நேரத்தில், காற்றுக்கென்ன வேலியை நீண்ட காலமாக பார்த்து வந்த, அதன் கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் நேசித்த ரசிகர்களுக்கு குறிப்பிட்ட நேர மாற்றம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது; ரசிகர்கள் தத்தம் அதிருப்திகளையும் தெரிவித்து இருந்தனர்.

    சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் பர்த்டே கொண்டாட்டம் – வைரலாகும் போட்டோக்கள்!

    காற்றுக்கென்ன வேலி சீரியல் - ஒரு பெண் எப்படி தன் கல்விக்காகப் போராடுகிறாள் என்பதையும், அதற்காக அவள் சந்திக்கும் சிக்கல்கல்கள் மற்றும் மனிதர்களையும் பற்றியதே ஆகும். இந்த சீரியல், குறிப்பாக இளம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டாலும், காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு ரசிகர்கள் குறையவில்லை என்பதற்கான சமீபத்திய சாட்சி தான் - வெளியாகி உள்ள டெலிவிஷன் ரேட்டிங் விவரங்கள்!

    ஆனால் இந்த தகவல் வெளியாகியுள்ள நேரம் தான், ரசிகர்களுக்கு மத்தியில் சில கேள்விகளை கிளப்பி உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸில் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை, இந்த சீரியலுக்கு சரியான விளம்பரம் கூட இல்லை என்பதை மிகவும் கோபத்துடனும், வருத்தத்துடனும் தெரிவித்து இருந்தார் நடிகை ஷியமளா. இவர் குறிப்பிட்ட சீரியலில் மரகதம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    யானையிடம் இருந்து சிறுவனை காப்பாற்ற போராடிய தந்தை – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

    2022 விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், கையில் விருதுடன் நிற்கும் ஒரு போட்டோவை தன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து, "போட்டு இருக்குற ட்ரெஸ் என்னுடையது தான்.. ஆனால் பிடித்து இருக்குற அவார்ட் என்னுடையது இல்லை" என்று ஆரம்பித்து மிகவும் நீளமான ஒரு பதிவை எழுதி இருந்தார். அதில் தரமான கதையம்சம் கொண்ட காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்று கூறி முழுக்க முழுக்க விஜய் டிவியை கழுவி ஊற்றி இருந்தார்.

    இது நடந்த ஒரு சில தினங்களுக்குள் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஆனது, மதிய நேரத்தில் ஒளிபரப்பப்படும் விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக மாறி இருப்பது - "நடிகை ஷியமளாவின் புலம்பல் சரிதானா? அல்லது அவர் தவறான புரிதலை கொண்டுள்ளாரா? எந்த சீரியலை எப்போது ஒளிபரப்ப வேண்டும் என்று விஜய் டிவிக்கு தெரியாதா?" உட்பட - ரசிகர்களுக்கு மத்தியில் பல வகையான கேள்விகள் கிளம்ப வழிவகுத்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி