Home /News /entertainment /

நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரைக்கு வரும் பிரபல ஆங்கர்.. ஏன் அந்த சேனலுக்கு போகல?

நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரைக்கு வரும் பிரபல ஆங்கர்.. ஏன் அந்த சேனலுக்கு போகல?

 ஆங்கர் ஜெகன்

ஆங்கர் ஜெகன்

நடிகர் ஜெகன் என்று கூறினாலே, ‘யம்மா நீ படம் ஓட்னது போதும்’ என்று அவரின் பிரபலமான வசனம் அவரின் உடல்மொழியோடு தோன்றும்.

    தமிழ் சேனல்களில் சீரியல்கள் மட்டும் தானா? ரியாலிட்டி ஷோக்கள்  இருக்காதா என்று சீரியல் பார்க்காதவர்களுக்கு சிறிய ஏமாற்றத்தையே பல சேனல்களும் அளித்து வருகின்றன. சீரியல்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது. அதைத் தீர்க்கும் வகையில் ஜீ தமிழில் புத்தம் புதிய கேம் ஷோ ஒன்று நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

    ’ரன் பேபி ரன்’  என்ற புதிய கேம் ஷோ பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 1:00 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க..என்ன நடக்கிறது விஜய் டிவியில்? ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்!

    புரோமோவைப் பார்க்கும் போது, வேடிக்கையான நிகழ்ச்சியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. பல விஜய் டிவி நட்சத்திரங்களை இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் காணலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா மற்றும் பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்ட சம்யுக்தாவும் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ஹைலைட், இதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெகன். நடிகர் மற்றும் பன்முக கலைஞரான ஜெகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

    நடிகர் ஜெகன், அயன், அம்புலி,அநேகன் என்று பல ஆண்டுகளாக பல்வேறு படங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளார்.

    நடிகர் ஜெகன் என்று கூறினாலே, ‘யம்மா நீ படம் ஓட்னது போதும்’ என்று அவரின் பிரபலமான வசனம் அவரின் உடல்மொழியோடு தோன்றும்.

    இதையும் படிங்க.. ஒருவழியா ஐபிஎஸ் படிக்க போகும் சந்தியா… அர்ச்சனாவுக்கு தெரிஞ்சா கதையே வேற!

    விஜய் டிவியில் ‘நண்டு வண்டு’ என்ற சூப்பர் ஹிட் கேம் ஷோவின் தொகுப்பாளர் ஜெகன். இவரின் டைமிங் சென்ஸ், பன்ச் டயலாக், மற்றும் பாடி லாங்வேஜ் அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளன. ரன் பேபி ரன் ஷோவும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவிக்கு போட்டியாக பல்வேறு நிகழ்ச்சிகளை களமிறக்கி வரும் ஜீ தமிழ் சேனலும், சுவாரஸ்யமான ஷோக்களை வழங்குவதில் சளைத்ததில்லை.



    எல்லா சேனல்களிலும் பாட்டு போட்டி நடக்கறது, டான்ஸ் போட்டி நடக்கிறது. அது மட்டுமின்றி எந்நேரமும், காலை முதல் இரவு வரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில், தமிழ் சேனல்களில் புதிதாக ஏதேனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகாத என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பார்வையாளர்களை ஈர்க்கக்கூடும் ’ரன் பேபி ரன்’ கேம் ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது.

    அது மட்டுமின்றி, ஜீ தமிழில் ஏற்கனவே பல கேம் ஷோக்கள் வெற்றி பெற்றுள்ளன. அதில் அதிர்ஷ்ட லட்சுமி என்ற கேம் ஷோ மிகவும் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அதே போல, இந்த புதிய கேம் ஷோவும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv, Zee tamil

    அடுத்த செய்தி