விஜய் டிவி பாலா என்றால் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களுக்கும் முதலில் ஞாபகத்தில் வரும் ஷோ குக் வித் கோமாளி. விஜய் டிவியில் அரங்கேறும் எந்த ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் சரி பாலா இருந்தால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டவர் கலக்க போவது யாரு பாலா. இந்த நிகழ்ச்சிக்கு அடுத்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற பாலா அதன்மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.மிமிக்ரி திறமையை கொண்டிருந்த இவரை தயாரிப்பாளர் அமுதவாணன் விஜய் டி.விக்கு அழைத்து வந்தார்.
அதே போல் பாலாவை ஜூங்கா படம் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்துவிட்டார் விஜய் சேதுபதி.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 சீசன்களாக இவர் செய்யும் காமெடிகள் வேற ரகம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக எடுத்துச் செல்கிறார் பாலா. போட்டியாளர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி மிகவும் பிடித்த கோமாளி என்றால் அது பாலா தான். அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆல்யாவை இவ்வளவு காதலிக்கிறாரா சஞ்சீவ்? 12 மணிக்கு மொத்த குடும்பத்தையும் வர வைத்தார்
சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் இன்று வெற்றி பெற்று புகழின் உச்சத்தில் இருக்கும் பெரும்பாலானோர் அந்த வெற்றியை பெறுவதற்காக தொடக்கத்தில் பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள் அதிகம் என்றே கூறலாம்.அந்த வகையில் பல சிரமங்களை தாண்டி தான் பாலா இந்த இடத்தை அடைந்து இருக்கிறார். ஆனாலும் அவரின் சிம்பிளிசிட்டி மட்டுமே என்றுமே மாறவில்லை. இந்த பண்பு கண்டிப்பாக ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டியது.
மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ’திருமதி செல்வம்’ அர்ச்சனா?
View this post on Instagram
ஷூட்டிங் பிஸியில் இரவு உணவு சாப்பிட லேட் ஆனதால், பாலா ரோட்டுக்கடையில் சாப்பாடு வாங்கி கொண்டு அதை பஸ் ஸ்டாப்பில் வைத்து சாப்பிட்டுள்ளார். கூடவே அங்கு சுற்றி திரியும் நாயை அழைத்து அதை வைத்து ஒரு ரைமிங் காமெடி செய்து ஸ்கோர் செய்கிறார். பாலா பஸ் ஸ்டாபில் சாப்பிடும் இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் பாலாவை ’man of simplicity’ என புகழ்ந்து தள்ளுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.