திருட்டுமுழியில் ஒரு வில்லத்தனம்.. பாக்கியலட்சுமி கோபியின் ரியல் கேரக்டர்!

பாக்கியலட்சுமி சீரியல் கோபி

இந்த படத்தை பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். படம் வெற்றி பெறவில்லை ஆனால் சதீஷ் பலராலும் கவனிக்கப்பட்டார்.

 • Share this:
  விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட்டான சீரியல் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல்.

  அன்றாடம் நம்ம வீடுகளில் காணும் அம்மா, அம்மாவை எப்போதும் போல திட்டும் மிடுக்கான அப்பா.. மகனுக்கே சப்போர்ட் செய்யும் வீட்டு பெரியவர்கள். அம்மாவின் அருமை தெரியாமல் உசாதினப்படுத்தும் பிள்ளைகள். இதுதான் இந்த தொடரின் சுருக்க கதை. இதையெல்லாம் சகித்துக்கொண்டு ஒரு சராசரி குடும்ப பெண்ணாக ஒட்டுமொத்த குடும்பத்தை கட்டிகாக்கும் லட்சுமியாக பாக்கியா.

  தொடக்கத்தில் இந்த தொடரில் நடிக்கும் கோபியின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் இப்போது அவரின் ரோல் பெண் ரசிகைகளால் திட்டி தீர்க்கப்படுகிறது. அதுதானே வில்லன் ரோலின் வெற்றி. திருட்டுமுழியில் பாக்கியாவை ஏமாற்றும் கோபி கதாபாத்திரம் இப்போது சூப்பர் டூப்பர் ஹிட். யார் இந்த கோபி? ஷார்டான பயோ இதோ உங்களுக்காக..

  இவரின் நிஜப்பெயர் சதீஷ். ஆனந்தம் சீரியல் சதீஷ் என்றால் பலருக்கும் தெரியும். சென்னையை சேர்ந்த இவர் 1979ல் பிறந்தார். இவரது முதல் திரைப்படம் மின்சாரப்பூவே. அந்த படத்திற்கு பிறகு ஏராளமான படங்களில் நடித்தார். வெள்ளித்திரையில் வெளியான MGR படத்தில் இவர் எம்.ஜி.ஆர் ராக நடித்திருந்தார். இந்த படத்தை பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். படம் வெற்றி பெறவில்லை ஆனால் சதீஷ் பலராலும் கவனிக்கப்பட்டார்.

  மனைவியுடன் சதீஷ்


  மாடலிங் செய்து வந்த இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பிறகு விஜய்டிவியில் நுழைந்து மகாராணி சீரியல் மூலமாக தான். 90ஸ் கிட்ஸ்களின் சீரியலான மந்திர பூமி, மாயமச்சிந்திரா போன்ற சீரியலில் இவரைப் பார்த்து இருப்பீர்கள்.
  வெள்ளித்திரையிலும் அவ்வபோது பெரிய படங்களில் நடித்து வந்தார். தனி ஒருவன், இருமுகன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

  பாக்கியலட்சுமி சீரியலில் நெகட்டிவ் ரோலை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். பயங்கரமான டான்ஸரும் கூட.
  Published by:Sreeja Sreeja
  First published: