விஜய் டிவி ஆல்யா மானசா, அவரின் செல்ல மகள் ஐலா பாப்பாவுக்காக அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போதே அதில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து கரம் பிடித்தார். இந்த ஜோடிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா என பெயர் சூட்டினர். பின்பு மீண்டும் சின்னத்திரையில் ராஜா ராணி 2 மூலம் ஆல்யா ரீ என்ட்ரி கொடுத்தார். 1 வருடம் தொடர்ந்து பிசியாக நடித்து வந்தார். அதற்குள் இரண்டாவது குழந்தை பிறக்க தற்போது மொத்தமாக சின்னத்திரைக்கு பாய் சொல்லி விட்டார்.
ஆல்யாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். ஆல்யா சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி விட்டார். ஆனால் சஞ்சீவ் தொடர்ந்து நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கயல் சீரியல் ஹீரோ சஞ்சீவ் தான். ஆல்யா - சஞ்சீவ் இருவரையும் ஒரே நேரத்தில் யூடியூப்பில் பார்க்கலாம். இவர்கள் ஆல்யா - சஞ்சீவ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர்.
சூர்யாவின் மனசை மாற்றிய வெண்ணிலா.. காற்றுக்கென்ன வேலியில் ட்விஸ்ட்!
இதில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிடுவார்கள். ஐலாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தொடங்கி அர்ஷ் பிறந்தது, மொட்டை அடித்தது என இவர்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் யூடியூப் வீடியோவில் வெளியாகும். அந்த வகையில் தற்போது எமோஷனல் வீடியோ ஒன்றை ஆல்யா- சஞ்சீவ் வெளியிட்டுள்ளனர். ஐலா பாப்பாவை முதல் முறையாக ஸ்கூலுக்கு அனுப்புகின்றனர் ஆல்யாவும் சஞ்சீவ்வும்.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் திருமணம் இந்த காரணத்தினால் நின்றதா?
பிரபல பிரைவேட் ஸ்கூல் ஒன்றில் ஐலாவுக்கு ஃபர்ஸ்ட் டே ஸ்கூல் அவரை வழியனுப்ப மொத்த குடும்பமும் செல்கின்றனர். வழக்கம் போல் செம்ம க்யூட்டாக ஐலா ஜாலியாக இருக்கிறார். பின்பு அவரை கிளாஸ் ரூமுக்குள் விட்டுட்டு ஆல்யா வெளியே வந்து விடுகிறார். ஐலா பாப்பா அம்மாவையும் அப்பாவையும் தேடி அழுகிறார். இதை ஆல்யாவால் பார்க்க முடியவில்லை.அவரும் எமோஷனல் ஆகி அழுகிறார்.
சஞ்சீவிடம் அழுது கொண்டே, “அவ ரொம்ப பாவம் , 2 வயசு தான் ஆகுது. அழுதறது பார்த்தா கஷ்டமா இருக்குறது” என்கிறார். அவரை சஞ்சீவ் சமாதானம் செய்கிறார். 1 மணி நேரம் கிளாஸ் முடிந்த உடன் ஐலா வீட்டுக்கு வருகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எல்லா பெற்றோர்களும் சந்திக்கும் அதே எமோஷனல் டைம் தான் ஆல்யா ,சரியாகிவிடும் என கமெண்ட் செய்துள்ளனர். வழக்கம் போல் இந்த வீடியோவும் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alya Manasa, TV Serial, Vijay tv