தமிழ் டிவி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பல முன்னணி டிவி சேனல்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள், சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் பிக்பாஸிற்கு போட்டியாக ஒளிபரப்பாகி வந்த சாகச ரியாலிட்டி ஷோவான ஜீ தமிழின் "சர்வைவர்" கடந்த சில வாரங்களுக்கு முன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு டெலிகாஸ்ட் செய்யப்பட்ட இந்த ரியாலிட்டிஷோ ஜான்சிஃபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் நடைபெற்றது.
இந்த ஷோவை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கினார். சர்வைவர் தமிழில் நடிகை விஜயலெட்சுமி, காயத்ரி ரெட்டி, நடிகர் நந்தா, விஜே பார்வதி, நடிகர் விக்ராந்த், பெசன்ட் ரவி, நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, இளம் நடிகர் சரண், லக்ஷ்மி பிரியா, நடிகர் நாராயண் லக்கி, லேடி காஷ், நடிகர் அம்ஜத் கான், ராம் சி, ஐஸ்வர்யா கிருஷ்ணன் உள்ளிட்ட 16 பேர் பங்கேற்றனர். காடர்கள் மற்றும் வேடர்கள் என இரு டீமாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு போட்டியிலிருந்தும் ஒரு போட்டியாளர் வீதம் வெளியேற்றப்பட்டு கடைசியாக விஜயலட்சுமி, வானசா, சரண் ஆகியோர் இறுதி போட்டிக்குள் சென்றனர். 90 நாட்கள் நடந்த இந்த ரியாலிட்டி ஷோவில் முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகி அசத்தினார் நடிகை விஜயலட்சுமி. பின் நடைபெற்ற இறுதி சுற்றில் இளம் நடிகர் சரண் சக்தியை வீழ்த்தி வெற்றி பெற்று டைட்டிலை தட்டி சென்றார் நடிகை விஜயலட்சுமி. ஒரு குழந்தைக்கு தாயான விஜயலட்சுமி சர்வைவர் இறுதி வரை வந்ததே பெரும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்ட நிலையில், இறுதி சுற்றிலும் வென்று மக்களை வியப்பில் ஆழ்த்தினார். டைட்டில் வென்ற இவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சர்வைவர் கேம் ஷோ முடிந்ததை அடுத்து தமிழகம் திரும்பிய நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் புதிய வீடு ஒன்றில் குடியேறினார். இதனை தொடர்ந்து பல நெட்டிசன்கள் "புது வீடு ! ஒரு கோடி ரூபாய் பரிசு கலக்குறீங்க விஜயலட்சுமி" என்றெல்லாம் கமெண்ட் செய்தனர். இதற்கு பதில் அளித்துள்ள நடிகை விஜயலட்சுமி, "போட்டியில் வென்ற பணம் இன்னும் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. ஏனென்றால் ரூல்ஸ் படி இறுதி போட்டி டெலிகாஸ்ட் ஆகிய பின் 2 மாதங்கள் கழித்து தான் அந்த பணம் எனக்கு கொடுக்கப்படும். எனவே ரூ.1 கோடியில் வாங்கிய புது வீடு என்றெல்லாம் கிளப்பி விடாதீர்கள். அதே போல சில போட்டியாளர்கள் பணம் கொடுத்து எனக்கு எதிரான நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பரவ செய்துள்ளார்கள்" என்றும் தனது லேட்டஸ்ட் வீடியோவில் கூறி இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil, TV Serial, Zee tamil