ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'துணிவு பேனரை விட்டுட்டு வாரிசு பேனருக்கு தடையா?' - கோபத்தில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்!

'துணிவு பேனரை விட்டுட்டு வாரிசு பேனருக்கு தடையா?' - கோபத்தில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்!

வாரிசு பேனர் - விஜய்

வாரிசு பேனர் - விஜய்

இரு  படங்களின் வெளியீட்டுக்கு இன்னும் 20 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில் விஜய் - அஜித் ரசிகர்களின் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகளில் இரண்டு படங்களின் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப் படத்தின் பேனர் பெரிதாக இருக்கிறது என ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கம் ஒன்றில் வாரிசு பட பேனரை  மூடி மறைக்கப்பட்டிருக்கும் போட்டோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். மற்றொருபக்கம் அஜித் ரசிகர்கள் அதனை உற்சாகமாக பதிவிட்டுவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திரையரங்கம் ட்விட்டரில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேவையில்லாத மோதலை தடுக்கவே பேனர் கவரால் மூடப்பட்டது. தற்போது ஸ்பெஷல் ஷோ முடிந்த பிறகு பேனரை மூடிய கவரை நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மூடி மறைக்கப்பட்ட வாரிசு பேனர்

இதனையடுத்து விஜய் பட ஸ்பெஷல் ஷோ திரையிடும்போது துணிவு பேனர் மறைக்கப்படுமா என கேள்வி எழுப்பிவருகின்றனர். இரு  படங்களின் வெளியீட்டுக்கு இன்னும் 20 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில் விஜய் - அஜித் ரசிகர்களின் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. படம் வெளியாகும் நாளில் திரையரங்குகளில் கலவரங்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Thunivu, Varisu