Home /News /entertainment /

விஜய் டிவி ரக்‌ஷனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்... குவியும் வாழ்த்துகள்!

விஜய் டிவி ரக்‌ஷனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்... குவியும் வாழ்த்துகள்!

வி.ஜே.ரக்‌ஷன்

வி.ஜே.ரக்‌ஷன்

ரக்‌ஷன் விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கர்களில் ஒருவராக உருமாறியுள்ளார் என்பது வெளிப்படையாகிறது.

    விஜய் டிவி நடிகர், நடிகைகள் மற்றும் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான விருது வழங்கும் நிகழ்ச்சியான விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸின் 7வது எடிஷன் விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளது (இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இம்மாத இறுதியில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பப்படலாம்). ஏற்கனவே 2022 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸின் ப்ரோமோ வீடியோக்கள் "விரைவில்" என்கிற டேக்லைனுடன் விஜய் டிவியில் தூள் பறக்க தொடங்கிவிட்டன.

    அறியாதோர்களுக்கு விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் தமிழ் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் நடிகர்கள் மற்றும் குழுவினரை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் விருது வழங்கும் விழாவே இந்த விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்!

    விஜய் டிவி விருதுகளானது, ஒவ்வொரு பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து பேர்களில் ஒருவருக்கு கிடைக்கும். விருதுகளை பெறும் வெற்றியாளர்கள் ஜூரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இம்முறை குக்கு வித் கோமாளி சீசன் 3, பிக் பாஸ் அல்டிமேட், பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பாரதி கண்ணம்மா போன்ற நிகழ்ச்சிகளின் நடிகர், நடிகைகள் மற்றும் குழுவினருக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதெல்லாம் ஒருபக்கம் இருக்க விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸின் வெற்றியாளர்கள் யார் யார் என்கிற ஒரு பட்டியல் ஏற்கனவே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பல விஜய் டிவி பிரபலங்கள் விருதுகளுடன் நிற்கும் போட்டோக்களும் வெளியான வண்ணம் உள்ளது. இருப்பினும் புகைப்பட ஆதாரமாக சிக்கியுள்ளது. வெளியான புகைப்படத்தின் படி, பெஸ்ட் ஆங்கர் (ஆண்) என்கிற விருது குக்கு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்காக ரக்ஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது .

    4 கார் இருக்கும் போது எதுக்காக சைக்கிள்ல போனீங்க? நெல்சன் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்!

    விஜய் டெலிவிஷன் அவார்ட்-ஐ வெல்வதன் வழியாக வி.ஜே ரக்ஷன், விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கர்களில் ஒருவராக உருமாறியுள்ளார் என்பது வெளிப்படையாகிறது. ராஜ் டிவி மற்றும் கலைஞர் டிவியில் பணியாற்றிய பிறகு 2015 - 2018 வரை 'கலக்க போவது யாரு' சீசன் 5,6 மற்றும் 7 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் ரக்ஷன். பின் 2018-ல் ஜோடி ஃபன் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டார். 2019-ல் குக்கு வித் கோமாளி சீசன் 1-ஐ தொகுத்து வழங்கி பெருவாரியான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். பிறகு 2020ல், தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார், அந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானின் நண்பராக ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

    Mouna Raagam 2: ஒரே வார்த்தையில் ஸ்ருதியை ஆஃப் செய்த தருண்! எதிர்பாராத ட்விஸ்ட்டில் மெளனராகம்...

    தற்போது, ரக்ஷன் எந்த நிகழ்ச்சி வழியாக மிகவும் பிரபலமடைந்தாரோ அதே நிகழ்ச்சியின் சீசன் 3 -க்காக சிறந்த ஆங்கர் விருதை வென்றுள்ளார். விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸில், ரக்ஷனை தவிர்த்து பிக் பாஸ் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, விஜே அர்ச்சனா, பாரதி கண்ணம்மாவின் கதாநாயகி வினுஷா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் போன்றவர்களுக்கும் விஜய் டிவி விருதுகள் கிடைத்துள்ளதாகவும் அரசல் புரசலாக தகவல்கள் கிடைத்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி