Home /News /entertainment /

இரண்டே மாதத்தில் BMW-வை தொடர்ந்து இன்னொரு கார் வாங்கிய விஜே மணிமேகலை.!

இரண்டே மாதத்தில் BMW-வை தொடர்ந்து இன்னொரு கார் வாங்கிய விஜே மணிமேகலை.!

விஜய் டிவி மணிமேகலை

விஜய் டிவி மணிமேகலை

முதலில் விஜய் டிவி-யில் சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்ட மணிமேகலை, பின் விஜய் டிவி-யின் ஷோக்களை தொகுத்து வழங்க துவங்கினார்.

    சின்னத்திரையில் பலர் ஆங்கரிங் செய்தாலும் அதில் ஒரு சிலர் தான் மக்களின் மனதில் நின்று பெரும் புகழை பெற்று அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர்.

    அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளரும், விஜே-வுமான மணிமேகலை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருந்து வருகிறார். படபடப்பு மற்றும் கலகலப்பான பேச்சின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்றுள்ள இவரது ஒன்-லைனர்கள் மக்களிடையே பிரபலமாக உதவியது. பிரபல முன்னணி தமிழ் மியூசிக் சேனலான சன் மியூசிக் சேனலில் VJ-வாக அறிமுகமானார்.

    சன் குரூப்பில் பணிபுரியும் போது மணிமேகலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை கலகலப்பாக பேட்டி எடுப்பது வரை சிறப்பாக செயல்பட்டு சின்னத்திரை ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். இவரது தைரியமான பேச்சு மற்றும் அணுகுமுறையும் ரசிகர்களை கவர காரணமாக அமைந்தது. உதவி நடன இயக்குனரான ஹுசைனை காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2017-ல் காதலரை கரம் பிடித்து திருமண வாழ்வில் நுழைந்தார். கிட்டத்தட்ட சன் நெட்வொர்க்கில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடந்த2019-ல் தொழில் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டார்.

    பிரபல முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் டிவிக்கு மாறினார் மணிமேகலை. முதலில் விஜய் டிவி-யில் சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்ட மணிமேகலை, பின் விஜய் டிவி-யின் ஷோக்களை தொகுத்து வழங்க துவங்கினார். குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்ற இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் சின்னத்திரை ரசிகர்களிடையே மேலும் இவரை பிரபலமடைய செய்தது.

    தனது காதல் கணவர் ஹுசைனுடன் அடிக்கடி எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்களை தனது சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பார். கடந்த செப்டம்பர் மாதம் மணிமேகலை - ஹுசைன் ஜோடி BMW சொகுசு கார் ஒன்றை வாங்கினர். இதனை சோஷியல் மீடியாவில் மிகவும் சந்தோஷத்துடன் ஷேர் செய்தனர். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது இந்த ஜோடி மற்றொரு புதிய காரை வாங்கி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்றை மணிமேகலை தனது இன்ஸ்டா ரீலில் ஷேர் செய்து இருக்கிறார். 2021 இன் 2-வது புதிய வருகை என்று கேப்ஷனிட்டு புதிய கார் வாங்கி இருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் மணிமேகலை.



     




    View this post on Instagram





     

    A post shared by Mani Megalai (@iammanimegalai)






    தற்போது மணிமேகலை புதிதாக Hyundai Venue காரை வாங்கி இருக்கிறார். வீடியோவில் தனது பழைய Hyundai i20-ஐ மிஸ் செய்வதாக கூறி இருக்கும் மணிமேகலை, புதுப்பேட்டை திரைப்படத்தின் பிரபல பாடலான "வரியா"லிரிக்கை பிஜிஎம்-ஆக சேர்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். குறுகிய காலத்திற்குள் 2-வது காரை வாங்கி இருக்கும் மணிமேகலைக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி