பிரபல சின்னத்திரை நடிகை மணிமேகலை தங்களுடைய விலையுயர்ந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சன் மியூஸிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஹூசைன் என்ற நடன இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சன் குழுமத்திலிருந்து விஜய் டிவிக்கு மாறினார்.
மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருக்கும் நிலையில், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது அவர் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிரம் பக்கத்தில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தனது கணவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனமான கே.டி.எம் பைக் திருடு போய்விட்டதாக பதிவிட்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு அந்த இரு சக்கர வாகனத்தை வாங்கியதாகவும், அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கே.ஜி.எஃப் முதல் இரண்டு பாகமும் மாபெரும் வெற்றி... அடுத்த பாகத்தின் வேலைகள் தொடக்கம்!
மணிமேகலையின் குடும்ப நண்பரான அரவிந்த் என்பவருடைய வீடு அசோக் நகரில் உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக அரவிந்த், மணிமேகலையின் கணவர் ஹுசைனின் வாகனத்தை ஓட்டி வந்திருக்கிறார். இந்த நிலையில் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக அரவிந்த், அசோக் நகர் காவல் நிலையத்தில் மணிமேகலையின் சார்பாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.