தொடையில் 16 தையல், நிற்கவே முடியாது... விஜய் டிவி வி.ஜே.அர்ச்சனாவின் தற்போதைய நிலை

வி.ஜே.அர்ச்சனா

படப்பிடிப்புக்கு வந்தால் தொடர்ந்து 15 - 16 மணிநேரம் செட்டில் நிற்க வேண்டும், ஆனால் தற்போது காலில் வலி இருப்பதால் என்னால் தொடர்ந்து நிற்க முடியாது.

 • Share this:
  தனது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டிருப்பதாக, வி.ஜே.அர்ச்சனா தனது யூ-ட்யூப் நேரலையில் தெரிவித்துள்ளார்.

  சன் டிவி-யில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுமமானவர் அர்ச்சனா. அதன் பிறகு, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, கவனம் பெற்றார். இதையடுத்து விஜய் டிவி-யில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

  இந்நிலையில் கடந்த மாதம் அர்ச்சனாவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அர்ச்சனா, ஆபரேஷனுக்குப் பிறகு முதன் முதலாக தனது யூ-ட்யூப் சேனலில் நேரலையில் பேசினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  அந்த வீடியோவில் அர்ச்சனா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அப்போது, “மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எப்போ வருவீங்க என்று பலரும் கேட்டு வருகிறார்கள். இப்போ கூட நான் வர தயாராக இருக்கிறேன். ஆனால் எனது வலது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது. தொடையில் உள்ள தசையை வெட்டி சிஎஸ்எஃப் கசிவை சரிசெய்ய மூக்கு பகுதியில் ஒட்டி உள்ளனர்.

  படப்பிடிப்புக்கு வந்தால் தொடர்ந்து 15 - 16 மணிநேரம் செட்டில் நிற்க வேண்டும், ஆனால் தற்போது காலில் வலி இருப்பதால் என்னால் தொடர்ந்து நிற்க முடியாது. மீண்டும் பழைய நிலைக்கு நான் திரும்ப இன்னும் சில மாதம் ஆகும் என்று நினைக்கிறேன். செப்டம்பர் 3-ம் தேதி மருத்துவமனையில் ஒரு பரிசோதனை இருக்கிறது. அந்த பரிசோதனைக்கு பிறகே அனைத்தும் தெரியவரும்” என்று கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: