Home /News /entertainment /

பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்த விஜய் டிவி பிரபலம்! யாருன்னு பாருங்க...

பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்த விஜய் டிவி பிரபலம்! யாருன்னு பாருங்க...

கோமதி ப்ரியா

கோமதி ப்ரியா

பொதுவாக சின்னத்திரை நடிகைகள் பலரும் நடிப்பு திறனுடன் பல திறமைகளை வளர்த்து கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான திறமைகள் கண்டிப்பாக இருக்கும். சிலர் அற்புதமாக வரைவார்கள், சிலர் அழகாக பாடுவார்கள், சிலர் திறமையாக நடிப்பார்கள், சிலர் நன்றாக படிப்பார்கள், அதே போன்று சிலருக்கு இது போன்ற பல திறன்கள் ஒன்றாக கலந்து இருக்கவும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட பல திறன்களை உடையவர்களை பன்முக திறன்கள் கொண்டவராக குறிப்பிடுவர். யார் வேண்டுமென்றாலும் எல்லா வகையான திறமைகளையும் வளர்த்து கொள்ள முடியும். இதற்கு அவசியம் தேவையானது முயற்சி மற்றும் தொடர் ஈடுபாடு தான்.

    இப்படிப்பட்ட விஷயத்தில் சினிமா பிரபலங்கள் மிகவும் திறமைசாலியாக இருப்பார்கள். சில சினிமா பிரபலங்கள் சிறப்பாக நடிக்கவும் செய்வார்கள். அதே போன்று அற்புதமாக பாடவும் செய்வார்கள். மேலும் சிலர் படத்தை இயக்குவதோடு, அதில் நடித்து கூட இருக்கிறார்கள். இது போன்ற ஏராளமானோர் சினிமா தரையில் உள்ளனர். மேலும் சின்னத்திரையிலும் இப்படிப்பட்ட சில முக்கிய திறமைசாலிகள் உள்ளனர். நடிப்பு, நடனம், பாடல், இயக்கம் என பன்முக திறன் கொண்டார்களாக இங்கு வளர்ந்த பிறகு வெள்ளித்திரையில் மாபெரும் வளர்ச்சி பெற்றவர்கள் பலர்.

    அதே போன்று தற்போது உள்ள இளம் நடிகர் மற்றும் நடிகைகள் சிறு வயதிலேயே சினிமா திரையில் மிக முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று அதிக உழைப்பு செலுத்தி வருகின்றனர். பல சின்னத்திரை பிரபலங்கள் விடா முயற்சியுடன் நிறைய விஷயங்களை செய்து வருகின்றனர். இது அவர்களின் சினிமா வாய்ப்புகளையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சின்னத்திரையில் நடித்து கொண்டு இருக்கும்போதே அவர்களின் திறமையினால் வெள்ளித்திரையில் நுழைந்து விடுகின்றனர்.

    Thalapathy Vijay: நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி-யில் தோன்றும் விஜய்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    இதே போன்ற ஒரு அற்புதமான வாய்ப்பு தான் சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவருக்கும் உருவாகி உள்ளது. பொதுவாக சின்னத்திரை நடிகைகள் பலரும் நடிப்பு திறனுடன் பல திறமைகளை வளர்த்து கொண்டு வருகின்றனர். மாடலிங், பட்டிமன்ற பேச்சு, வீஜே, நடனம் என பலவித திறமைகளை படிப்படியாக வளர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது கோமதி ப்ரியாவும் இணைந்துள்ளார். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஓவியா என்கிற தொடரின் மூலம் அறிமுகமானார். அதில் ஹீரோயினாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் கோமதி ப்ரியா. இந்த சீரியலில் இவரது நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. இதனால் ரசிகர்களிடம் இருந்து பல பாராட்டுகளை பெற்றுள்ளார்.

    விஜய்யை விட நான் பெரிய நடிகன் இல்லை - வியக்க வைத்த கே.ஜி.எஃப் 2 யாஷ்!

    தமிழ் தொடர்களில் நடித்துடன் நிறுத்தி கொள்ளலாம், தெலுங்கு சின்னத்திரையிலும் இவர் என்ட்ரி கொடுத்தார். ஹிட்லர் கரி பெல்லாம் என்கிற தொடரில் ஹீரோயினாக நடித்து தெலுங்கில் தனக்கான முக்கிய இடத்தை பிடித்து கொண்டார். இவருக்கென்று தெலுங்கில் தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார் கோமதி ப்ரியா. இதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)






    இவரின் அடுத்த தேர்வாக இருந்தது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வேலைக்காரன் தொடர் தான். இதில் இவர் ஹீரோயினாக நடித்து பலரின் மனதில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்த தொடர் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்து, மிகவும் பிரபலமான ஒருவராக தற்போது கோமதி ப்ரியா மாறி உள்ளார். இவரின் அடுத்த அவதாரமாக சிங்கராக மாறி உள்ளார். புரொபஷனல் ப்ளேபேக் சிங்கராக மாறி சிறப்பாக ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த மகிழ்ச்சியாக செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோமதி ப்ரியா பகிர்ந்துள்ளார். இது குறித்து பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி