பொதுவாக சீரியல்கள் பல இருந்தாலும் அவற்றில் சில நாம் எதிர்பார்ப்பதை விடவும் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக சீரியல்களில் வரக்கூடிய காட்சி அமைப்பு, நடிகர்களின் நடிப்பு திறன் போன்றவற்றை மக்கள் பெரும்பாலும் விரும்பி பார்ப்பதற்கான முக்கிய காரணமாகும். திரைப்படங்களை போன்றே இப்போதெல்லாம் சின்னத்திரை தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நடிகர்களுக்கு போடப்படும் மேக் அப் முதல் ஆடைகள் வரை எல்லாமே மிகவும் தரமானதாக மாறி உள்ளது.
தொலைகாட்சி சீரியல்கள் இது போன்று சிறப்பானதாக இருப்பதால் அதிக பார்வையாளர்கள் ரசித்து பார்க்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி சீரியல்கள் அனைத்துமே மிக தரமானதாக உருவாக்கப்படுகிறது. சாதாரண நிகழ்ச்சிகள் முதல் அன்றாட தொடர்கள் வரை அனைத்துமே சிறப்பான முறையில் உள்ளன. அதே போல பல சீரியல்களில் திரைப்படங்களுக்கு நிகரான கதை களமும், காட்சிகளும் அமைக்கப்படுகின்றன.
இப்படி ஒரு நிகழ்வு தான் விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான வேலைக்காரன் தொடரில் நடந்துள்ளது. இந்த வேலைக்காரன் சீரியல் புரோமோ வந்தபோதே இது முத்து படத்தின் சீரியல் வெர்ஷன் என்பதை அறிந்தனர். அதற்கேற்றார் போல இந்த சீரியல் தூள் கிளப்பி வருகிறது. இது போன்ற கதையெல்லாம் மக்களுக்கு பிடிக்காது என்பது போன்ற பல விமர்சனங்களை தாண்டி தற்போது வேலைக்காரன் சீரியல் விஜய் டிவியின் நம்பர் 1 மதிய நேர சீரியலாக வலம் வருகிறது.
இந்த வேலைக்காரன் சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர். வேலன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சபரியும், வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் கோமதி ப்ரியாவும், விசாலாட்சி என்கிற கதாபாத்திரத்தில் மலையாள சினிமா நடிகை சோனா நாயர் அவர்களும், ராகவன் என்கிற கதாபாத்திரத்தில் சத்யாவும் நடித்து வருகின்றனர். தற்போது வேலன் மற்றும் வள்ளி திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதனால் சேனல் டி.ஆர்.பி டாப்பில் வந்துவிட்டது.
அதே போன்று இந்த வேலைக்காரன் தொடரில் தற்போது ஒரு காமெடியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. இதில் முக்கிய கதாப்பாத்திரமான திவ்யாவிற்கு ஷாக் அடிப்பது போன்ற ஒரு சீன் வரவுள்ளது. அதில் எப்படி அந்த சீனை உருவாக்குகிறார்கள் என்பதை விரிவாக காட்டி உள்ளனர். ஷாக் அடித்தால் எது போன்ற நிலை இருக்கும் என்பதையும், அதில் போடப்படும் மேக் அப் முழுவதையும் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளனர்.
இந்த வீடியோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் பலர் இந்த பதிவிற்கு தங்களது கருத்துக்களை கமெண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர். "மேக் அப் சிறப்பாக உள்ளது", "வெரி நைஸ் திவ்யா", "செம்ம ஆக்டிங்" போன்ற கமெண்ட்களை பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் ஷேர் செய்தும் வருகின்றனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.