Home /News /entertainment /

அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

வேலைக்காரன் சீரியல்

வேலைக்காரன் சீரியல்

Vijay Tv Velaikkaran Serial : வேலைக்காரன் சீரியல் அடுத்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டி.வில் என்றாலே வாரம் முழுவதும் வகை வகையாய் வித்தியாசமான சீரியல்களும், வீக் என்டில் கலகலப்பான ரியாலிட்டி ஷோக்களும் தான் நம் அனைவரது கண்முன்னும் வந்து செல்லும். தற்போது எல்லாம் ரியாலிட்டி ஷோ மற்றும் சினிமா படங்களை விட சீரியல்கள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் தான் விஜய் டி.வி., சன் டி.வி., கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என அனைத்து எண்டர்டெயின்மெண்ட் சேனல்களும் போட்டி, போட்டுக்கொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.

விஜய் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாக்கியலட்சுமி’ , ‘தமிழும் சரஸ்வதியும்’, ‘பாவம் கணேசன்’ ‘முத்தழகு’, ‘ஈரமான ரோஜாவே’, ‘மெளன ராகம்’ என ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. புதிததாக ‘செல்லம்மா’ மற்றும் ‘சிப்பிக்குள் முத்து’ என இரண்டு சீரியல்களை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.

புது சீரியல்கள் பற்றிய அறிவிப்பு வருகிறது என்றாலே பழைய சீரியலில் ஏதாவது ஒன்று முடிவுக்கு வரப்போகிறது என்று தானே அர்த்தம். ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘செந்தூரப்பூவே’ தொடர் திடீரென நிறுத்தப்பட்டது. இதில் சினிமா நடிகர் ரஞ்சித் நடித்திருந்ததும், கதை நன்றாக இருந்ததும் ரசிகர்கள் மனதில் இடம் பெற வைத்திருந்தது. ஆனால் டிஆர்பி ரேட்டிங்கில் பெரிதாக ரீச் இல்லாததால் இந்த சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக தான் அக்கா - தங்கைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.



also read : எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பாலாக்குள்ள இப்படி ஒரு கஷ்டமா!

தற்போது மற்றொரு பிரபல சீரியலும் அடுத்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வேலைக்காரன்’. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்ட ‘முத்து’ படத்தில் சீரியல் வெர்ஷனாக வேலைக்காரன் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வேலன் கதாபாத்திரத்தில் சபரி நடித்து வருகிறார். வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் கோமதி ப்ரியாவும், விசாலாட்சி என்கிற கதாபாத்திரத்தில் மலையாள சினிமா நடிகை சோனா நாயரும்  ராகவன் என்கிற கதாபாத்திரத்தில் சத்யாவும் நடித்து வருகின்றனர்.

மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் சீரியலிலேயே வேலைக்காரன் சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் பட்டையைக் கிளப்பி வந்தது. அதுவும் சமீபத்தில் வேலன், வள்ளி திருமணத்தின் போது டிஆர்பி ரேட்டிங் வேற லெவலுக்கு இருந்தது. இப்படி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் வேலைக்காரன் சீரியலை அடுத்த வாரத்தோடு முடிவுக்கு கொண்டு வர விஜய் டி.வி. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு பதிலாக அம்மா பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள செல்லம்மா சீரியல் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல், மே 9ம் தேதி மதியம் 2 மணிக்கு செல்லமா சீரியல் ஒளிபரப்பாகும் என விஜய் டி.வி. புரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இதனால் விஜய் டி.வி. ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Vijay tv

அடுத்த செய்தி