தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பலவும் மக்களை அதனுடன் அதிகம் தொடர்புடையதாக மாற்றி விட கூடிய வல்லமை பெற்றவை. இதற்கு முக்கிய காரணம் அதன் கதைக்களமும், அதில் நடிக்க கூடிய கதாபாத்திரங்களும் தான். இப்படி சிறப்பாக ஒளிபரப்பாகும் தொடர்களை ஒருநாள் கூட தவற விடக்கூடாது என்று பெரும்பாலும் மக்கள் எண்ணுவார்கள். இப்படிப்பட்ட சீரியலை திடீரென்று நிறுத்தி விட்டால் அவ்வளவு தான். இது போன்று சீரியல்களை சட்டென்று நிறுத்துவதற்கு சில காரணிகள் உண்டு.
பட வாய்ப்பின் காரணமாக பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நேரடியாக அந்த சீரியலில் இருந்து விலகி விட்டால் சீரியல் நன்றாக ஓடாது என்கிற காரணத்தால் நிறுத்தி விட கூடும். கதாபாத்திரங்களை மாற்றினாலும் பல நேரங்களில் அந்த தொடருக்கான வரவேற்பு குறைந்து விடும். எனவே தான் அதை நிறுத்தி விடுகின்றனர். இப்படியொரு நிகழ்வு தான் விஜய் டிவியில் சமீப காலமாக சில தொடர்களில் நடந்து வருகிறது.
பாரதி கண்ணம்மா தொடரிலும் இப்படி ஒரு நிகழ்வு சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. பட வாய்ப்பு காரணமாக முன்னணி கதாபாத்திரங்கள் இத்தொடரில் இருந்து விலகி கொண்டனர். இருப்பினும் வேறொரு நடிகையை கொண்டு நாடகத்தை இயக்கி வருகின்றனர். ஆனால், வைதேகி காத்திருந்தாள் தொடரில் இருந்து அதன் லீடிங் ரோலில் நடித்து வந்த பிரஜின் விலகி உள்ளதால் சீரியலையே நிறுத்தி உள்ளனர்.
விஜய் டிவியில் சமீபத்தில் தான் 'வைதேகி காத்திருந்தாள்' தொடர் தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் பிரபல நடிகரான பிரஜின், நடிகை சரண்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். இந்நிலையில் பலருக்கும் இவர்களின் ஜோடி பொருத்தும் மிகவும் பிடித்திருந்தது. மேலும் இந்த தொடரில், பழம்பெரும் நடிகையான லதா அவர்களும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வந்தார்.
Thalaivar 169: நெல்சன் திலீப் குமார், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ரஜினியின் தலைவர் 169!
இந்த தொடரின் கதாநாயகனான பிரஜினுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவர் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து அவருக்கு பதிலாக ‘ராஜபார்வை’ தொடரில் கதாநாயகனாக நடித்த முன்னா என்பவர் கதாநாயகனாக நடித்து வந்தார். முன்னா சில எபிசோடுகள் மட்டுமே நடிக்க தொடங்கிய நிலையில் தற்போது திடீரென வைதேகி காத்திருந்தாள் சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
இது மீனா இல்ல... ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?
இது குறித்து, அந்த சீரியலின் இயக்குனர் மிகவும் வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், 'வாழ்க்கைப் பயணத்துல சுவாரஸ்யமான விஷயமே பல திருப்பங்கள் தான். இன்னும் கூடுதலான பாஸிட்டிவ் எனர்ஜியோட அடுத்த எதிர்பாராத சுவாரஸ்யத்தைத் தேடிப் பயணிக்கிறேன். எனது பயணத்தில் எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் தங்களுக்கும், என்னுடன் பயணித்த.. பயணிக்கும் அனைவருக்கும் என்றென்றும் நன்றிகள் பல!’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர் அந்த தொடரின் கதாநாயகியான சரண்யாவும் இதே போன்று உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.