தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தம்பி கார்த்தியாக நடித்து வரும் நவீனின் மனைவி செளம்யாவுக்கு வளைகாப்பு நடந்துள்ளது.
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலும் தனித்தனியான கான்செப்ட் உடன் வெளியாகி, விதவிதமான ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்திழுத்து வருகிறது. அந்த வகையில் வார நாட்களில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இதில் பிரபல சீரியல் நடிகர் தீபக் தமிழ் கேரக்டரிலும், சரஸ்வதி கேரக்டரில் பிரபல டிவி ஷோ தொகுப்பாளரும், சீரியல் நடிகையுமான நக்ஷத்ரா நாகேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகர் தீபக் நீண்ட காலத்திற்கு பிறகு சின்னத்திரையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
அவரின் கம்பேக்கும் அவருக்கு மிகப்பெரிய
வெற்றியை வாங்கி தந்துள்ளது. ஒளிப்பரப்பாக தொடங்கிய சில மாதத்திலே சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தைப் பிடித்துள்ளது. தொழிலால் படிப்படியாக வளர்ந்த ஹீரோ குடும்பம், அவர்களை போட்டியாக நினைத்து தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள துடிக்கும் வில்லி குடும்பம், படித்த வாத்தியார் குடும்பத்தில் படிக்காமல் இருக்கும் ஹீரோயின் இவர்களுக்கு நடக்கும் மோதல்,
காதல், பாசம், பழிவாங்கும் படலம் ஆகியவையே தமிழும் சரஸ்வதியும் கதைக்களம்.
அஜித்தின் நாங்க வேற மாரி சாதனையை முறியடித்த விஜய்யின் அரபிக் குத்து!
படிக்காத சரஸ்வதியை கோதை எப்படி மருமகளாக ஏற்பார். இந்த திருமணமே நடக்காது என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பத்துடன் திருமணம் கோலாகலமாக நிறைவடைந்தது.
Arabic Kuthu: யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம், 20 மில்லியன் நிகழ்நேர பார்வைகள்... கலக்கும் விஜய்யின் அரபிக் குத்து!
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதையின் இளையமகன் கார்த்தியாக நடித்து வருபவர் நவீன் வெற்றி. வசுந்த்ராவின் கணவரான இவர் வில்லி சந்திரகலாவின் மாப்பிள்ளையாக இந்த சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நவீனின் மனைவி செளம்யாவுக்கு தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்தப் படம் இணையத்தில் வெளியாகிய நிலையில், தற்போது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.