Home /News /entertainment /

அசிங்கமாக பேசிய அந்த ஆடியோவை ரிலீஸ் செய்வேன்.. பிக் பாஸ் தாடி பாலாஜியை எச்சரிக்கும் நித்யா!

அசிங்கமாக பேசிய அந்த ஆடியோவை ரிலீஸ் செய்வேன்.. பிக் பாஸ் தாடி பாலாஜியை எச்சரிக்கும் நித்யா!

தாடி பாலாஜி - நித்யா

தாடி பாலாஜி - நித்யா

இன்ஸ்டாவில் பேசிய நித்யா, "பாலாஜியின் பேச்சுக்குஎதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்

  சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்து வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இதனிடையே கடந்த ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிக்பாஸின் OTT வெர்ஷனான பிக்பாஸ் அல்ட்டிமேட் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த Bigg Boss Ultimate ரியாலிட்டி ஷோவில் வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி பெரியசாமி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட 13 பேருடன் நடிகர் தாடி பாலாஜியும் போட்டியாளராக தற்போது பங்கேற்று உள்ளார்.

  நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தான் தாடி பாலாஜி மீண்டும் Bigg Boss Ultimate வீட்டிற்குள் நுழைந்து உள்ளார். பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்றுள்ள தாடி பாலாஜி தனது மகளை மிகவும் மிஸ் செய்வதாகவும், பிரச்சனைகளுக்கு எல்லாம் மனைவி நித்யாவே காரணம் என்று கடுமையாக சாடி அடிக்கடி பேசி வந்தார்.

  இந்நிலையில் தான் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, தன்னைப் பற்றி பொய்யான செய்திகளை பாலாஜி பரப்புவதாக குற்றம் சாட்டி இருக்கிறார். நித்யா தனது இன்ஸ்டாகிராம் லைவ் செஷனில் தாடி பாலாஜி மீது சில கடும் குற்றச்சாட்டுகளை கூறினார், அவர் வாட்ஸ்அப் மூலம் தன்னையும் தனது மகள் போஷிகாவையும் உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாக நித்யா புகார் கூறி இருக்கிறார். பாலாஜி மகள் போஷிகாவை அசிங்கமாக திட்டியதற்கான வாய்ஸ் ரெக்கார்ட் தன்னிடம் இருப்பதாகவும் நித்யா கூறினார்.

  இன்ஸ்டாவில் பேசிய நித்யா, "பாலாஜியின் பேச்சுக்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். பாலாஜி வேண்டுமென்றே நிகழ்ச்சியில் எனது கேரக்டரை டேமேஜ் செய்ய தொடர்ந்து முயன்று வருகிறார். அவர் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறினால், என்னையும் என் குழந்தையையும் அவர் ஆபாசமாக மற்றும்

  இதையும் படிங்க.. பிக் பாஸ் 5 வீட்டில் நடந்தது இதுதான்.. சிபி, அமீர், பாவ்னி பற்றி புட்டு புட்டு வைக்கும் ராஜூ!

  அசிங்கமாக திட்டி பேசிய வாய்ஸ் ரெக்கார்ட்களை நிச்சயமாக வெளியிடுவேன்" என்று ஆவேசமாக கூறி இருக்கிறார். தவிர பாலாஜி மது அருந்தி விட்டு அவருடைய டிரைவரை வைத்து என்னை போனில் அசிங்கமாக திட்ட சொல்லி அவர் அருகில் இருந்து கொண்டே சிரித்து உற்சாகமடைந்த ஆடியோவும் என்னிடம் இருக்கிறது. என் இமேஜை டேமேஜ் செய்தால் தொடர்ந்து பொறுமையாக இருக்க மாட்டேன்.  ஒவ்வொரு ஆடியோவாக ரிலீஸ் செய்து பாலாஜியின் சுயரூபத்தை வெளிஉலகிற்கு காட்டி விடுவேன் என்று எச்சரித்து உள்ளார். போஷிகாவை மிஸ் செய்வதாக கூறி அவர் நாடகமாடி கொண்டிருக்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல என்றார். தொடர்ந்து அதே லைவில் பேசிய போஷிகா அப்பா மீடியாவிற்காக நீங்க இப்படி பேசாதீங்க. எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு புரியற அளவுக்கு மெச்சூரிட்டி இருக்கு என்று கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் பேசிய வீடியோ இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Actor Balaji, Bigg Boss Tamil, Vijay tv

  அடுத்த செய்தி