Home /News /entertainment /

ஆர்டர் எடுக்க சென்ற இடத்தில் இங்கிலீஷ் பேச முடியாமல் தவிக்கும் தமிழ்! கடைசியில் வந்த ட்விஸ்ட்.

ஆர்டர் எடுக்க சென்ற இடத்தில் இங்கிலீஷ் பேச முடியாமல் தவிக்கும் தமிழ்! கடைசியில் வந்த ட்விஸ்ட்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல்

தமிழும் சரஸ்வதியும் சீரியல்

Tamizhum Sarawathiyum Serial : தமிழும் சரஸ்வதியும் சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகிவுள்ளது.

    திரைப்படங்களை தியேட்டரில் சென்று பார்க்கும் போது எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே எதிர்பார்ப்பு ஒவ்வொரு வாரமும் சீரியல் ப்ரோமோ வெளியாகும் போது இருக்கிறது. சீரியல் பிரியர்களுக்கு ஏற்றமாதிரி ஒவ்வொரு சீரியலிலும் ட்விஸ்க்கு மேல் ட்விஸ்ட் வந்துக்கொண்டே இருக்கிறது.

    முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, மௌனராகம் ஆகிய சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    அப்படிப்பட்ட ஒரு ட்விஸ்ட் தான் தற்போது வெளியாகிவுள்ள தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் அரங்கேறியுள்ளது. தனது கம்பேனிக்கான ஆர்டரை பெற ஒரு நிறுவனத்துக்கு செல்கிறார் தமிழ். அங்கு கம்பெனியை பற்றி விளக்குமாறு கூறுகின்றனர். அப்போது ப்ரசண்டேஷனை  இங்கிலீஷில் விவரிக்க தடுமாறுகிறார். உங்களுக்கு ப்ரசண்டேஷனே ஒழுங்க பண்ண வரல, நீங்க எப்படி ப்ராடக்ட கரெக்டா கொடுப்பீங்க என தமிழை திட்டி அனுப்பிவிட, தமிழோ சோகமாக சென்றுவிடுகிறார். பின்பு தமிழை மீண்டும் கூப்பிட்டு ‘உங்கள பத்தியும் உங்க கம்பெனி பத்தியும் நவீன் ரொம்ப நல்லா எடுத்து சொன்னாரு, அதனால் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு தருவதாக முடிவு செய்துள்ளோம்’ என்று கம்பெனி எம்.டி கூறுகிறார்.

    also read : ‘லாஸ்லியா லீக்ஸ்’ ஹேக் ஆன அக்கவுண்டிலிருந்து வெளிவந்த போட்டோஸ்.. அதிர்ச்சியான லாஸ்லியா

    இதை கேட்டவுடன் தமிழ் உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறார். கம்பெனி விஷயத்தில் எப்படியாவது தமிழை தோற்கடிக்க வேண்டும் என ஒருபக்கம் சந்திரகலா நினைத்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் கோதை அம்மா தமிழ் பக்கமே நிற்கிறார்.


    கம்பெனிக்கு ஆர்டர் கிடைத்த செய்தியை கேட்டு சந்திரகலா என்ன செய்ய போகிறார்? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி