Home /News /entertainment /

ஒரே ஒரு பாடலில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்த சூப்பர் சிங்கர் பிரியங்கா... எப்படி தெரியுமா?

ஒரே ஒரு பாடலில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்த சூப்பர் சிங்கர் பிரியங்கா... எப்படி தெரியுமா?

பிரியங்கா

பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், ஜூனியர் பாடகர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக ப்ரியங்கா பங்கேற்றார்.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமல்ல, நடனம், பாட்டு, காமெடி, கேம் ஷோ, ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திற்குமே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கதறி அழவைக்கும் ‘பாரதி கண்ணம்மா’வில் இருந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி வரை ஒவ்வொன்னும் அப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்த தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

    இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது வெள்ளித்திரையில் டாப் சிங்கர்களாக கலக்கி வருகின்றனர். திவாகர், சந்தோஷ் பிரவீன், சத்யபிரகாஷ், செந்தில், ராஜலட்சுமி ஆகியோரும் ஜூனியர் சீசனில் கலந்துகொண்ட நித்திய ஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீஷா, பூவையார் என்று பல பேரும் தற்போது வளர்ந்து பாடகர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

    Beast Arabic Kuthu: விஜய், பூஜா ஹெக்டேவின் தாறுமாறான ஆட்டத்தில் அரபிக் குத்து பாடல் வீடியோ!

    இந்த வரிசையில் சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரியங்கா பற்றி வெளியான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரியங்கா இறுதிச்சுற்று வரை சென்று வெற்றி வாகை சூடவில்லை என்றாலும், ' சின்ன சின்ன வண்ண குயில்' என்ற ஒற்றை பாடல் மூலமாக உலக பேமஸ் ஆனார், அந்த ஒரே பாடலுக்குத் தான் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளமும் கிடைத்தது.

    Valentine's Day 2022: காதலர்கள் மிஸ் பண்ணக்கூடாத தமிழ் ரொமாண்டிக் திரைப்படங்கள்!

    அதன் பின்னர் ப்ரியங்காவிற்கு சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஜிவி பிரகாஷ், இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். இடையில் தான் படித்து முடித்த பல் மருத்துவத்தையும் கைவிட்டு விடாமல், இலவச மருத்துவ முகாம்களை நடத்தி சேவையாற்றி வருகிறார்.



    Valentine’s Day 2022: காதலில் திளைத்து பின் பிரிந்து போன காதல் ஜோடிகள்!

    தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், ஜூனியர் பாடகர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக ப்ரியங்கா பங்கேற்றார். அதில் அவர், ‘சின்ன சின்ன வண்ணக்குயில்’ பாடலை பாடியுள்ளார். பிரியங்கா பாடலை பாடி முடித்ததும் மேடைக்கு வந்த மாகாபா மற்றும் மைனா நந்தினி அவரை புகழ்ந்து பேசினர். 'சின்ன சின்ன வண்ண குயில்' எனும் ஒரே ஒரு பாடலை பாடி, ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தவர் பிரியங்கா, “காண காண என பாடியே இளையராஜா சாரை எங்கே அந்த பொண்ணு அப்படின்னு தேட வச்சவங்க” என பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி