ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோலாகலமாக துவங்கும் விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் 9!

கோலாகலமாக துவங்கும் விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் 9!

சூப்பர் சிங்கர் 9

சூப்பர் சிங்கர் 9

போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்தவுடன் சூப்பர் 5 ஸோன், சூப்பர் 3 ஸோனாக மாறும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சி வரும் 19-ம் தேதி மாலை 6.30 மணிக்கு துவங்கவிருக்கிறது.

  ஸ்டார் விஜய்யின் முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. திரைத்துறையில் பின்னணி பாடகர்களாக இருக்கும் பலரை இந்நிகழ்ச்சி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இதன் 9-வது சீசன் வரும் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு பிரமாண்டமாக துவங்கிறது. இதையடுத்து ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எப்போதுமே மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. கடந்த எட்டு சீசன்களில் புகழ்பெற்ற நடுவர்கள் மற்றும் மூத்த இசைக்கலைஞர்கள் அடங்கிய குழு இளம் திறமைகளை அடையாளம் கண்டது.

  சூப்பர் சிங்கரின் சீசன் 9, சிறந்த 20 போட்டியாளர்களுடன் தொடங்குகிறது. ஒவ்வொரு போட்டியாளரும் அவரது செயல்திறனுக்கு ஏற்ப தரவரிசைப்படுத்தப்பட்டு, அதிக மதிப்பெண் பெற்றவருக்கு ‘சூப்பர் 5 ஸோனில்’ இடம் வழங்கப்படும். வார வாரம் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் சூப்பர் 5 ஸோனின் நிலை மாறிக்கொண்டே இருக்கும். அதேபோல் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்தவுடன் சூப்பர் 5 ஸோன், சூப்பர் 3 ஸோனாக மாறும். எனவே தனித்துவமான மற்றும் சவாலான சுற்றுகளுடன் கூடிய இந்த சீசன் இசை ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.

  முக்கிய கதையில் நடிக்க விஜய்யை அணுகிய ஷங்கர்?

  முதல் ஐந்து இறுதிப் போட்டியாளர்கள், நடுவரின் மதிப்பெண்கள் மற்றும் பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் 'சூப்பர் சிங்கர்' என்ற டைட்டிலுக்காக மோதுவார்கள்.

  இந்த சீசனுக்கான நடுவர் குழுவில் அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனை பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் ம.கா.பா ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Vijay tv