விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியல் நிறுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் டிவி தற்போது ‘காற்றுக்கென்ன வேலி’, ‘பாவம் கணேசன்’, ‘மெளன ராகம் 2’ என பல புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதோடு விரைவில் ‘ராஜ பார்வை’ என்ற சீரியலும் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதற்கான டீசரையும் சேனல் தரப்பில் வெளியிட்டிருக்கிறார்கள்.
Sivakarthikeyan: தள்ளிப் போகிறதா சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ்?
ராஜ பார்வை சீரியலில் ஹீரோவாக ‘சந்திர லேகா’ சீரியல் ஹீரோ முன்னா நடிக்கிறார். ஹீரோயினாக ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடித்த ராஷ்மி ஜெயராஜ் நடிக்கிறார். பார்வையற்ற ஹீரோ, கிராமத்து பெண் மீது காதல் கொள்வதாக டீசரில் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜபார்வை சீரியலுக்காக, ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் நிறுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கபீஸ் பாபு இயக்கி வரும் இந்த சீரியல் பெரிதளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. தற்போது ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் குழுவினர் எடுத்துக் கொண்ட படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்