ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் டிவியை ஓரங்கட்ட சினேகாவுடன் கைக்கோர்த்த ஜீ தமிழ்.. அந்த பிரபலத்தின் மனைவியும் இருக்காங்க!

விஜய் டிவியை ஓரங்கட்ட சினேகாவுடன் கைக்கோர்த்த ஜீ தமிழ்.. அந்த பிரபலத்தின் மனைவியும் இருக்காங்க!

ஜீ தமிழ்

ஜீ தமிழ்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே நடுவர்களை வைத்து ஒரு சர்ச்சையும் வெடித்துள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சேனல் டி.ஆர்.பியில் விஜய் டிவியை முந்த ஜீ தமிழ் சேனல் அடுத்த புது நிகழ்ச்சியை களத்தில் கொண்டுவரவுள்ளது. இதில் விஜய் டிவி பிரபலங்கள் இருவரையும் அழைத்து வந்து ஜட்ஜ்-ஜாக புது அங்கீகாரத்தையும் தந்துள்ளது.

  சேனல் டி.ஆர்பியை உயர்த்த முன்னணி சேனல்கள் பலவிதமான மாற்றங்களை கையாளும் இது வழக்கமான ஒன்று தான். அதிலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் இந்த மூன்று சேனல்களும் மக்களுக்கு நெருக்கமான ஒன்று. கிட்டத்தட்ட 3 சேனலிலும் ஒரே மாதிரியான சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், வீக் எண்டு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்படும். எதாவது ஒரு இடத்தில் ஒரு சேனல் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து அந்த வாரம் டாப்பில் வந்து விடும். அப்படி தான் ஒவ்வொரு நாளும் சென்றுக் கொண்டிருக்கிறது.

  இதில் சின்னத்திரை நடிகர்களும் மாறி மாறி ஒவ்வொரு சேனலிலும் இடம் பிடிப்பார்கள். ஜீ தமிழ் சேனலில் சீரியல் முடித்தவர்கள் விஜய் டிவியில் ரியாலிட்டு ஷோக்களில் பங்கு கொள்வார்கள், விஜய் டிவியில் பிஸியாக இருந்த நடிகர்கள் சன் டிவியில்புது சீரியலில் கமிட் ஆவார்கள் இப்படி பல மாற்றங்கள் சேனலுக்கு ஏற்ப அவ்வப்போது நிகழும். அந்த வகையில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனை வைத்து சர்வையர் நிகழ்ச்சியை நடத்தியது.ஆனால் அது எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதே நேரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பூவே உனக்காக சீரியலை வைத்தே கீழே தள்ளியது சன் டிவி. இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் ஜீனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4நிகழ்ச்சியை வரும் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பவுள்ளது.

  விஜய் டிவியின் மிகப் பெரிய ஹிட் சீரியலின் 2வது பாகம் தயார்! ஹீரோ ஹீரோயின் இவர்கள் தான்

  இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது தான் இன்னும் சுவாரசியம். நடிகை சினேகா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் விஜய் டிவி சீரியல் புகழ் மிர்ச்சி சரவணன், அவருடன் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோரும் நடுவர்களாக கலந்து கொள்கிறார்கள்.
   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)  இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் சாந்தனு மனைவி கிகி. இதற்கான படப்பிடிப்பு தளத்தில் எடுக்க்ப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லை இந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா புகழ் குழந்தை நட்சத்திரம் ஹேமாவும் கலந்து கொள்கிறார். எற்கெனவே ஜீனியர் ஸ்டார்ஸ் மூன்று சீசன்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இப்போது நான்காவது சீசனும் மக்களை கவரும் என நம்பப்படுகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)  இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே நடுவர்களை வைத்து ஒரு சர்ச்சையும் வெடித்துள்ளது. இதில் மூன்றாவது ஜட்ஜ்-ஜாக மாடல் சம்யுக்தா அறிவிக்கப்பட்டுள்ளதை பலரும் விரும்பவில்லை என்பது போல் சரமாரியான கருத்துகள் இன்ஸ்டாகிராமில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே பிக் பாஸ் ஷோவில் வளர்ப்பு குறித்து பேசி சிக்கலில் மாட்டிக் கொண்ட சேம் சரியான தேர்வு இல்லை என்கின்றனர் ரசிகர்கள். இதனால் அவர் எப்படி இந்த நிக்ழ்ச்சியை கொண்டு செல்வார் என எதிர்பார்ப்பு ஒருபக்கம் அதிகரித்துள்ளது. வரும் 26ஆம் தேதி முதல் நிகழ்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Sneha, TV Serial, Vijay tv, Zee tamil