Vijay Tv: சூப்பர் ஹிட் நிகழ்ச்சிக்கு என்ட் கார்ட் போட்ட விஜய் டிவி

Vijay Tv: சூப்பர் ஹிட் நிகழ்ச்சிக்கு என்ட் கார்ட் போட்ட விஜய் டிவி

விஜய் டிவி நிகழ்ச்சிக்குழு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து விரைவில் அடுத்த சீசனை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா.

  • Share this:
    பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் விஜய் டிவிக்கென தனி இடமும், ரசிகர்களும் உண்டு. அதேபோல் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

    இதனால் விஜய் டிவியில் முகம் காட்டிய பலரும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர். சமீபத்தில் மக்களிடம் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி சீசன் 2-க்கு என்ட் கார்ட் போட்டது விஜய் டிவி. விரைவில் அடுத்த சீசன் ஒளிபரப்பாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மற்றொரு காமெடி நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்துள்ளது. பிரியங்கா தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் விஜய் டிவியின் முகங்களே இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுவார்கள். அதேபோல் ஸ்டார்ட் மியூசிக்கின் ஒவ்வொரு பகுதியையும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக வடிவமைத்திருக்கும் நிகழ்ச்சிக் குழு. கடந்த வாரம் கடைசி எபிசோடில் குக் வித் கோமாளி பிரபலங்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




    தற்போது இந்நிகழ்ச்சி நிறைவடைந்திருக்கும் நிலையில் விரைவில் விஜய் டிவி அடுத்த சீசனை ஆரம்பித்து எங்களைப் போன்ற ஊழியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sheik Hanifah
    First published: