கனி - பாபா பாஸ்கர் இடையே மோதலா? விஜய் டிவியின் புதிய வீடியோ

பாபா பாஸ்கர் - கனி

விஜய் டிவி வெளியிட்டிருக்கும் ஸ்டார்ட் மியூசிக் ப்ரமோ வீடியோவில் கனி மற்றும் பாபா பாஸ்கர் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

  • Share this:
சமையல் நிகழ்ச்சி என்றாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசனில் வனிதா விஜயகுமாரும் இரண்டாவது சீசனில் கனியும் வெற்றியாளர்களாக தேர்வாகினர். கடந்த ஏப்ரல் 14-ம் தேதியுடன் இரண்டாவது சீசன் முடிவடைந்த நிலையில் விரைவில் 3-வது சீசன் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

இந்நிலையில் குக்வித் கோமாளி சீசன் 2-ல் பங்கேற்றவர்களை வைத்து ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது விஜய் டிவி. அதில் வெங்கடேஷ் பட், அஸ்வின், கனி ஆகியோர் ஒரு அணியாகவும், மதுரை முத்து, ஷகிலா, பாபா பாஸ்கர் மற்றொரு அணியாகவும் பிரிந்துள்ளனர். டாஸ்க் ஒன்றின் போது பாபா பாஸ்கரைப் பார்த்து அவுட் ஆகிவிட்டதாக கனி சொல்ல தான் கொஞ்சம் பதட்டப்பட்டு விட்டதாக கூறுகிறார் பாபா பாஸ்கர்.

ஒருகட்டத்தில் பாபா பாஸ்கரை அந்தப் பக்கம் போகச் சொல்லும் கனி அசிங்கமாகிவிடும் என்கிறார்.  இதையடுத்து பாபா பாஸ்கரின் முகம் மாறுகிறது. மேலும் அசிங்கமாகி விடும் என்று சொன்ன கனியைப் பார்த்து டஇப்படி பேசினால் தப்பாகிவிடும் எனக்கூறும் பாபா பாஸ்கர் சமாதானப்படுத்த முயன்ற மதுரை முத்துவிடமும் ஆவேசமடைகிறார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைகிறார் தொகுப்பாளினி ப்ரியங்கா. இந்தக் காட்சிகள் அனைத்தும் விஜய் டிவி வெளியிட்டிருக்கும் ப்ரமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.உண்மையில் நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by:Sheik Hanifah
First published: