ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உங்கள் பேச்சை சப் டைட்டிலுடன் பார்க்கிறேன்... சிவாங்கியை பாராட்டிய பாடகி ஷ்ரேயா கோஷல்!

உங்கள் பேச்சை சப் டைட்டிலுடன் பார்க்கிறேன்... சிவாங்கியை பாராட்டிய பாடகி ஷ்ரேயா கோஷல்!

சிவாங்கி - ஷ்ரேயா கோஷல்

சிவாங்கி - ஷ்ரேயா கோஷல்

சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சிவாங்கி, சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்திலும் நடித்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல பாடகி ஷ்ரேயா கோஷலை சந்தித்த மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஜய் டிவி சிவாங்கி.

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி கிரிஷ், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி'யில் கலந்துக் கொண்ட பிறகு மேலும் பிரபலமடைந்தார். படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள இளம் பாடகியான அவர், பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் தீவிர ரசிகை என நிறைய முறை தெரிவித்திருக்கிறார். தற்போது சிவாங்கி, பாடகி ஸ்ரேயா கோஷலை சந்தித்த மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஷ்ரேயா கோஷலைச் சந்தித்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சிவாங்கி, "மேம், மிக்க நன்றி நீங்கள் எனக்கு வாழ்நாள் நினைவை அளித்துள்ளீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நீங்கள் என்னைப் பற்றி எங்கு பேசினாலும், உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் நான் பார்க்கிறேன். அது தமிழில் இருந்தாலும் சப் டைட்டில் மொழி பெயர்ப்புடன் பார்க்கிறேன். இந்த பெண் மிகவும் திறமையானவள், அவளுக்குள் என்ன ஒரு எனெர்ஜி? உங்கள் கச்சேரியின் கிளிப்புகளில் நீங்கள் மிகவும் அழகாக பாடுவதை நான் பார்த்தேன். 'முன்பே வா' பாடலை நீங்களும் அழகாக பாடியிருந்தீர்கள்” என சிவாங்கியை மனதார பாராட்டியிருந்தார் ஷ்ரேயா.

அதற்கு பதிலளித்த சிவாங்கி, "நன்றி. உண்மையில் உங்களால் தான் நான் பாட ஆரம்பித்தேன். உங்களைப் போல் ஆக விரும்பினேன்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்துள்ள ஷ்ரேயா கோஷல், “இனிய சிவாங்கி, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பதான் படத்தை உங்கள் மகளுடன் பாருங்கள் - ஷாருக்கானுக்கு பாஜக சபாநாயகர் கிரீஷ் கெளதம் சவால்

இதற்கிடையில், சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சிவாங்கி, சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்திலும் நடித்திருந்தார். அதோடு சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்துள்ள 'காசேதான் கடவுளா' படத்திலும் நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், ஊர்வசி, கருணாகரன், மனோபாலா, தலைவாசல் விஜய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema