டாப் 2 இடங்களை பிடித்த விஜய் டிவி சீரியல்கள்... சன் டிவிக்கு சறுக்கல்

பாரதி கண்ணம்மா சீரியல்

சன்டிவியில் ஒளிப்பராகி வரும் ரோஜா சீரியல் தான் இதுவரை தமிழ் சீரியல்கள் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வந்தது.

  • Share this:
    டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி விஜய் டிவி சீரியல்கள் முதலிடத்தை பிடித்துள்ளது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக சீரியல்கள் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல சீரியல்களில் பழைய எபிசோட்கள் மற்றும் ஒரு சிலர் மட்டும் கலந்து கொண்ட எபிசோட்கள் ஒளிபரப்பாகி வந்தன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சீரியல்கள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சன்டிவியில் ஒளிப்பராகி வரும் ரோஜா சீரியல் தான் இதுவரை தமிழ் சீரியல்கள் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரத்திற்கான டிஆர்பி புள்ளிகள் வெளியாகி உள்ளது.

    Also Read :  சார்பட்டா பரம்பரைக்கு இத்தனை கோடிகளா? - ஆச்சரியத்தில் திரையுலகம்!

    அதில் பாரதி கண்ணம்மா சீரியல் 11.31 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. ராஜா ராணி சீரியல் 9.81 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இதனை அந்த சீரியலின் தயாரிப்பு நிறுவனம் க்ளோபல் வில்லேஜர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Global Villagers (@globalvillagers)






    சன் டிவியின் பூவே உனக்காக மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது, ரோஜா சீரியலுக்கு 9.50 புள்ளிகள் உடன் நான்காம் இடம் தான் கிடைத்து இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் வானத்தைப்போல 8.96 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளதால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: