• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் - ஏன் தெரியுமா?

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் - ஏன் தெரியுமா?

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமான ஜாக்குலின், லீட் ரோலில் நடிக்கும் தேன்மொழி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து அனைவருக்கும் பிடித்த வி.ஜே-வாக மாறினார் ஜாக்குலின். விஜய் டிவியில் வி.ஜே-வாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட ’கனா காணும் காலங்கள்’ மற்றும் ’ஆண்டாள் அழகர்’ ஆகிய சீரியல்களில் ஜாக்குலின் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் ’கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பன்னூர் தான் ஜாக்குலினின் சொந்த ஊர். சென்னை, செயிண்ட் மேரீஸ் பள்ளியில், பள்ளி படிப்பையும், லயோலா கல்லூரியில் இளங்கலை படிப்பும் படித்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த ஜாக்குலின் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ஏர்ஹோஸ்டஸாகவும் பணியாற்றியுள்ளார். விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தவுடன் முழுநேர தொகுப்பாளராக களமிறங்கினார். ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் தொடங்கி ஏழாவது சீசன் வரை அந்த நிகழ்ச்சியை ரக்‌ஷன், ஜாக்குலின் இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.

Also Read : உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் வடிவேலு சந்திப்பு..

பிறரை கலாய்த்தும், தன்னை கலாய்ப்பதற்கு அசட்டுத்தனமாக சிரிப்பதும் என செம ஜாலியாக அந்நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது. பின்னர், சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தொகுப்பாளினி பணியை விட்டு, நடிக்கச் சென்றார். விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி பி.ஏ’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஆனால், இந்த சீரியல் தான் இப்போது முடிவுக்கு வரப்போகிறதாம். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், நேரப்பிரச்சனை காரணமாக அடிக்கடி வெவ்வேறு ஸ்லாட்டுகளில் ஒளிபரப்பப்பட்டது.

அந்தநேரத்தில் கொரோனா வைரஸூம் ருத்ர தாண்டவம் ஆடியதால் சீரியலின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேன்மொழி பி.ஏ சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப கதைக்களமும் மாற்றியமைக்கப்பட்டு, முடிவுரையை நோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது.

Also Read : மகனின் முதலாம் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

தொகுப்பாளினி பணியை விட்டுவிட்டு, ஹீரோயினாக நடிக்க வந்த முதல் சீரியல் விரைவில் முடிவுக்கு வருவது ஜாக்குலினுக்கு வருத்தமாம். அதேநேரத்தில் அடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இந்த சீரியலுக்கு சென்ற பிறகு தொகுப்பாளினியாக ஜாக்குலின் பணியாற்றவில்லை என்றாலும், முரட்டு சிங்கிள் ரியாலிட்டி ஷோவில் 5 நடுவர்களில் ஒருவராக வந்தார். அந்த ஷோவில் போட்டியாளர்களுடன் இணைந்து பர்மாமென்ஸ் செய்து கலக்கினார். தற்போது, ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் கேர்ல்ஸ் வெர்சனிலும் ஜாக்குலின் கலந்து கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: