முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புதிய மாற்றங்கள், திருப்பங்களுடன் விஜய் டிவி சீரியல்கள் - ரசிகர்கள் உற்சாகம்

புதிய மாற்றங்கள், திருப்பங்களுடன் விஜய் டிவி சீரியல்கள் - ரசிகர்கள் உற்சாகம்

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கொரோனா பரவலை குறைக்க விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் காரணமாக புதிய எபிசோட்களுடன் ஒளிபரப்பு ஆகாமல் இருந்த விஜய் டிவி சீரியல்கள், இன்று முதல் புத்தம் புது பொலிவு மற்றும் புதிய எபிசோட்களுடன் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளன.

  • Last Updated :

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவியது. முதலில் வடமாநிலங்களில் மிக கடுமையான உயிர் சேதங்களை ஏற்படுத்திய இரண்டாம் அலை, தீவிரமாக பரவி தென்னிந்திய மாநிலங்களை பாதிக்க துவங்கியது. படிப்படியாக கொரோனா முதல் அலையில் இருந்து தமிழகம் மீண்டிருந்த நிலையில், திடீரென வேகமெடுத்த கோவிட் தொற்றால் மக்கள் கடும் பீதிக்கு உள்ளாகினர். கிட்டத்தட்ட வட மாநிலங்களை போலவே தமிழகத்திலும் மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லாமல் போனது, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட நெருக்கடி ஏற்பட்டது.

இதனை அடுத்து கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தினசரி கொரோனா பாதிப்பு 25,000 என்ற எண்ணிக்கை எல்லாம் எளிதாக கடந்த 33,000 என்றார் எண்ணிக்கையை தாண்டி சென்று கொண்டே இருந்தது. மக்களின் உயிர் மற்றும் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி இரண்டையும் கருத்தில் கொண்டு மே 24 முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு லாக்டவுன் நல்ல பலன் அளித்ததை அடுத்து மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. குறிப்பிட்ட 11 மாவட்டங்களை தவிர தலைநகர் சென்னை உட்பட மீதமுள்ள 27 மாவட்டங்களில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

Also Read : கர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி

இதை அடுத்து தற்போது மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த சீரியல் ஷூட்டிங்குகள் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகின்றன. விஜய் டிவி சீரியல்களுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். லாக்டவுன் காரணமாக தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பல சீரியல்களின் பழைய எபிசோட்கள் சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், இன்று முதல் புது எபிசோட்கள் ஒளிபரப்பாக உள்ளது சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தகவலை ராஜபார்வை சீரியலின் ஹீரோ நடிகர் முன்னா தனது இன்ஸ்டா வீடியோ மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். ராஜபார்வை மட்டுமின்றி நடிகர் ரஞ்சித் நடிக்கும் செந்தூரப்பூவே, ராஜா ராணி 2, ஈரமான ரோஜாவே, வேலைக்காரன், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட ரசிகர்களை கவர்ந்த பல சீரியல்களின் புது எபிசோட்கள் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளன.

Also Read : ஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்

top videos

    "வர்ற திங்கள்ல இருந்து உங்களுக்கு புடிச்ச எல்லா நட்சத்திரங்களோடா.. எல்லா நிகழ்ச்சிகளும் தொடருது.. எல்லாரும் மறக்காம பாருங்க" என்ற கேப்ஷனுடன் விஜய் டிவி-யின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவி சீரியல்களின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

    First published:

    Tags: Vijay tv