மௌன ராகம் 2 சீரியல் நிறுத்தமா? அப்டேட் கொடுத்த சீரியல் குழு

மௌன ராகம்

மௌனராகம் சீரியல் 2 மீண்டும் எப்போது ஒளிபரப்பாகும் என்ற தகவலை நாடகக்குழு வெளியிட்டுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மௌனராகம் 2 சீரியல் உருவானது. இந்த சீரியலில் சக்தி, வேலன் கதாப்பாத்திரங்களில் கிருத்திகா நடிக்கிறார். ஷெரின், ஷமிதா ஸ்ரீகுமார், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் போன்ற பலர் நடித்துள்ளார்கள். மற்றும் பிரபல இசை அமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் இந்தத் தொடருக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். தாய் செல்வம் தொடரை இயக்குகிறார். பரபரப்பான கதைக்களத்துடன் செல்லும் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பான சீரியல்களின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே எடுத்து வைத்திருந்த காட்சிகள் இருந்ததால், அந்த தொடர்கள் மட்டும் ஒளிபரப்பப்பட்டன. முக்கியமான சில தொடர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு இன்டோர் சூட்டிங்கை நடத்தினர்.

Also Read : விஜே சித்ரா மரணம் குறித்து வெளியிடப்படும் மோசமான தகவல்கள் - ரசிகர்கள் எச்சரிக்கை

இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்து சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது. சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பபடும் நிலையில், மௌன ராகம் சீரியல் பற்றிய எந்த தகவலும் ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. மௌன ராகம் ஒளிப்பரப்பான நேரத்தில் பாவம் கணேசன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், மௌன ராகம் 2 சீரியல் நிறுத்தப்பட்டுவிட்டதோ என்றெல்லாம்? யூகங்கள் கிளம்பின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாடகக் குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து சீரியல்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது போலவே தங்களுடைய படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. எபிசோட்களின் பேக்கப் இல்லை எனத் தெரிவித்துள்ள நாடகக் குழு, காலம் கடந்துள்ளதை ஒப்புக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வழிமுறைகளுடன் சூட்டிங் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ள நாடகக் குழு, தங்கள் மீது ஏற்கனவே ரசிகர்கள் வைத்திருக்கும் அதே அன்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Also Read : மெகா சங்கமத்தில் இணையாத பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள்... என்னாச்சு..?

இதனால், மௌன ராகம் சீரியல் குறித்து சந்தேகத்துக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கதைக் களத்தைப் பொறுத்தவரை முதல் பாகத்தில் சிறுமியாக இருந்த சக்தி தற்போது வேலைக்கு செல்லும் பெண்ணாக வளர்ந்துள்ளார். இசையில் அதீத ஆர்வம் கொண்டிருக்கும் சக்தி, சென்னையில் அத்தை வீட்டில் வசிக்கிறார். அப்பா யார் என்பதை கண்டுபிடித்துவிட்டாலும், அவரிடம் உண்மையான மகள் தான் என்பதை சொல்ல முடியாமல் தவிக்கிறார். இதற்கு இடையே குடும்பத்தில் நடக்கும் சூழ்ச்சிகள், கொடுமைகளை சக்தி எப்படி கையாள்கிறார் என்பதை பொறுத்து கதைக்களம் ஜோராக செல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: