Home /News /entertainment /

விஜய் டிவியில் இன்று ஒருநாள் நிறுத்தப்படும் சீரியல்கள்.. என்ன காரணம்?

விஜய் டிவியில் இன்று ஒருநாள் நிறுத்தப்படும் சீரியல்கள்.. என்ன காரணம்?

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

இன்று ஒருநாள் மட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் போன்ற சீரியல்களை ரசிகர்களால் பார்க்க முடியாது.

    விஜய் டிவியில் இன்று 6 மணி முதல் 9 மணி வரை ஒளீப்பரப்பாகும் சீரியல்களில் மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த 3 மணி நேரத்திற்கு பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமே ஒளிப்பரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீரியல் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சேனல்களில் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் சேனல்கள் முன்னிலையில் வகிக்கின்றன. இந்த 3 சேனல்களிலும் பீக் டைமிங் என அழைப்படும் மாலை 6 .00 முதல் இரவு 10.00 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களை பார்க்க தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இந்த நேரத்தில் ஒளிப்பரப்படும் சீரியல்கள் தான் சேனலின் டி.ஆர்.பியை நிர்வகிக்கிறது. எனவே இந்த நேரத்தில் முக்கியமான நடிகர் நடிகைகள் நடிக்கும் சீரியல்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கு சீரியல்கள் மட்டுமே ஒளிப்பரப்படுகின்றன.

    தாய்மை ஒரு பக்கம்.. தொழில் பக்தி ஒரு பக்கம்.. பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

    அந்த வகையில் விஜய் டிவியில் மாலை 6 - 9 மணி வரை பாண்டியன் ஸ்டோர்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும்,மெளன ராகம், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இந்நிலையில் இன்று (18.12.2021) சனிக்கிழமை மட்டும் 3 மணி நேரத்திற்கு சிறப்பு ஒளிப்பரப்பாக பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமே ஒளிப்பரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம் போல் இந்த 3 மணி நேரத்தில் ஒளிப்பரப்பாகும் மற்ற சீரியல்களை இன்று ரசிகர்களால் பார்க்க முடியாது.

    நடிகரின் அம்மாவை பழிவாங்கியது முதல் முகப்பருக்காக விலக்கப்பட்ட ஹீரோயின் வரை... சின்னத்திரை சந்தித்த சர்ச்சைகள்!

    இதனை புரமோ மூலம் விஜய் டிவி அறிவித்துள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் அண்மையில் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிக்கரமாக பயணித்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாகவும், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா புதியதாக திறக்கு கடையின் திறப்பு விழா ஸ்பெஷல் எபிசோடை காட்டும் விதமாகவும் இந்த 3 மணி நேர ஸ்பெஷல் ஒளிப்பரப்பை சீரியல் குழு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் இன்று ஒருநாள் மட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும், மெளன ராகம் போன்ற சீரியல்களை ரசிகர்களால் பார்க்க முடியாது.



    அதே நேரம் வழக்கம் போல் இரவு 9 மணிக்கு பாரதி கண்ணம்மா சீரியலும், 9.30 மணிக்கு ராஜா ராணி 2 சீரியலும் அதே நேரத்தில் ஒளிப்பரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி