• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காணாமல் போன ராஜா ராணி 2.. மகா சங்கமத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வித் தமிழும் சரஸ்வதியும்!

காணாமல் போன ராஜா ராணி 2.. மகா சங்கமத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வித் தமிழும் சரஸ்வதியும்!

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் புது சீரியலான நம்ம வீட்டு பொண்ணு மற்றும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலும் மகா சங்கம் எபிசோடாக ஒளிப்பரப்பாகவுள்ளது.

  • Share this:
    விஜய் டிவியில் இந்த வாரம் மகா சங்கமம் ஸ்பெஷலாக பாண்டியஸ் ஸ்டோர்ஸ் சீரியலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலும் ஒன்றிணைகிறது.

    சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் இந்த வாரம் மகா சங்கமம் கொண்டாட்டம். சென்னைக்கு வரும் பாண்டியஸ் ஸ்டோர்ஸ் சீரியலும் , கல்யாணத்தை முடித்த தமிழும் சரஸ்வதியும் சீரியலும் ஒன்றாக சேர்ந்து 1 மணி நேர எபிசோடுகள் ஒளிப்பரப்பாகவுள்ளன. கதைப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீனாவின் அப்பா, ஜீவாவும் தனது மகள் மீனாவும் தனியாக வெளியூர் செல்ல வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு போக ஏற்பாடு செய்கிறார். ஆனால் மீனாவால் குழந்தையை தனியாக பார்த்துக் கொள்ள முடியாது என்ற காரணம் சொல்லி, மொத்த குடும்பமும் கடைக்கு விடுமுறை விட்டுவிட்டு சென்னைக்கு கிளம்பி விட்டனர். செம்ம கடுப்பில் இருக்கும் மீனா வேறு வழியில்லாமல் இந்த ஃபேமலி டூருடன் சென்னைக்கு கிளம்புகிறார்.

    அதே போல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மற்றொரு சீரியலான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்திக் - வசுமதி கல்யாணம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நடந்து முடிந்துள்ளது. கோதை அம்மா வீட்டில் தான் மொத்த குடும்பமும் இருக்கின்றனர். இந்நிலையில் சென்னைக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், கோதை அம்மாவின் மகனான தமிழை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறது. இதனால் இரண்டு குடும்பமும், சந்தித்து பேசும் சூழல் ஏற்படுகிறது.

    இந்த சந்திப்பு மகா சங்கமமாக இந்த வாரம் முழுவதும் ஒளிப்பரப்பாகவுள்ளது. அதே போல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் புது சீரியலான நம்ம வீட்டு பொண்ணு மற்றும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலும் மகா சங்கம் எபிசோடாக ஒளிப்பரப்பாகவுள்ளது.



    இந்த லிஸ்டில் காணாமல் போனது ராஜா ராணி 2 சீரியல் தான். கடந்த சில வாரங்களாக ராஜா ராணி 2 சீரியல் டி.ஆ.பியில் பின் தங்கி வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், இப்போது எபிசோடில் சரவணன் சமையல் நிகழ்ச்சி போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு கட்டமாக முன்னேறி வருவது போல் எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இதில் சந்தியாவாக நடிக்கும் ஆல்யாவின் நடிப்பு ஓவர் ஆக்டிங்காக மாறி ரசிக்க வைக்கும் வகையில் இல்லை எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மகா சங்கமம் வாரத்திலும் ராஜா ராணி 2சீரியல் மிஸ் ஆகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: