பாரதி கண்ணம்மா vs நாம் இருவர் நமக்கு இருவர்... மிகப் பெரிய எதிர்பார்ப்பில் சீரியல் ரசிகர்கள்!

விஜய் டிவி சீரியல்கள்

இறுதி நாளான இன்று சீரியல் எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் விஜய் டிவி சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்கள் விருவிருப்பான கதைக்களத்தை எட்டி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.

  மற்ற சீரியல்களை காட்டிலும் விஜய் டிவி சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒளிப்பரப்பாகி வருகின்றன. டி.ஆர்பியில் நல்ல ரேட்டிங்கில் பீக் டைமில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாரதி கண்ணம்மா மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கடந்த வாரத்தில் இருந்து ரசிகர்கள் எதிர்பாராத ட்விஸ்டுகள் உடன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. வாரத்தின் இறுதி நாளான இன்று சீரியல் எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்.

  பாரதி கண்ணம்மா சீரியலை எடுத்து கொண்டால் 8 வருடமாக சவுந்தர்யா மறைத்து வைத்திருந்த உண்மையை கண்ணம்மா கண்டுப்பிடித்து விட்டார். கண்ணம்மாவுக்கு பிரசவத்தில் 2 குழந்தை பிறந்த கதை கண்ணம்மாவுக்கு டாக்டர் மூல தெரிந்து விட்டது. ஆதங்கத்தில் சவுந்தர்யாவுக்கு ஃபோன் செய்து கேட்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சவுந்தர்யா அதிர்ச்சியில் உறைந்து போய் ஃபோனை கட் செய்கிறார். ஆனால் விடாத கண்ணம்மா சவுந்தர்யா வீட்டுக்கு கிளம்பி நேரில் வருகிறார்.  என்ன சொல்ல போகிறார் சவுந்தர்யா? ஹேமா தான் கண்ணம்மாவின் மகள் என்ற உண்மை தெரிந்து விடுமா? பாரதிக்கு தெரிந்தால் என்ன நடக்கும்? இப்படி பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருக்க, அனைத்து கேள்விகளுக்கும் இன்று பதில் சொல்ல போகும் எபிசோடாக பாரதி கண்ணம்மா உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அடுத்தது, நாம் இருவர் நமக்கு இருவர் தொடர், முத்துராசு கொலைக்கு பிறகு நாச்சியாரின் மொத்த குடும்பமே வெளியில் நிற்கிறது. மாயன் அவர்களுக்கு ஆதரவாக நிற்க, யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக இரட்டை சகோதர்கள் என கதை மாற, படித்த மாறன் வந்து மொத்த கதையையும் மாற்றுகிறார். அதுமட்டுமில்லை மாயனும் மாறனும் பேசி தனது அம்மாவுடன் இணைகிறார்கள். மாசாணியை அடித்து துரத்தி விட்ட மாறன், மாயனை மீண்டும் வீட்டுக்கு கூப்பிடுகிறான்.  அந்த இடத்தில் தான் ட்விஸ்டே. மாயன் தன்னுடைய தங்கைகள் மற்றும் அம்மாவை அழைத்து கொண்டு வீட்டுக்குள்ள வர ஆசைப்பட, ஆனால் மாறன் நீயும் மகா மட்டும் தான் உள்ள வரனும் அப்படின்னு கண்டிஷன் போடுகிறான். இப்ப மாயன் கிட்ட தான் மொத்த முடிவும். நாச்சியாரா? அம்மாவா? மாயனின் முடிவு தான் கதையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்க போகுது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: