தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகள் எவை என்றால் ஒரு தராசில் ரியாலிட்டி ஷோக்களையும், மற்றொரு தராசில் சீரியல்களையும் வைக்கலாம். எனினும் இரண்டில் மிகவு பிடித்தவை எது என்ற போட்டி வைத்தால் இரண்டுமே சமமாக தான் இருக்கும்.
கலகலப்பான ரியாலிட்டி ஷோக்களுக்கு ஈக்வலாக விறுவிறுப்பான கதைக்களம், வித்தியாசமான காட்சிகள் என சீரியல்கள் மெருகேறி கொண்டே செல்கின்றன. ஒருபக்கம் சீரியல்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றாலும் ஏற்கனவே வெள்ளித்திரையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படங்களின் பெயர்களை தாங்கியோ அல்லது திரைப்படங்களின் கதையை தழுவிய கதைக்களத்தை கொண்டோ பல சீரியல்கள் ஒளிபரப்பபடுகின்றன.
முழு கதையும் இது தான் என்று தெரிந்தாலும் கூட ரசிகர்கள் ஒரு சில குறிப்பிட்ட சீரியலுக்கு கொடுக்கும் வரவேற்பு உண்மையில் ஆச்சர்யத்திற்குரியது. இதற்கு முழு காரணம் சீரியலின் காட்சியமைப்பில் செலுத்தப்படும் கவனம் மற்றும் கதையில் ஆங்காங்கே வைக்கப்படும் ட்விஸ்ட்கள் தான்.
முன்னணி சேனலான விஜய் டிவி-யில் காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் விஜய் டிவி-யில் வரும் 9-ஆம் தேதி முதல் "செல்லம்மா" என்ற சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது. புது சீரியல் உள்ளே வருகிறது என்றாலே பழைய சீரியலில் ஏதாவது ஒன்று முடிய போகிறது என்று தானே அர்த்தம்.
மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற "வேலைக்காரன்" சீரியலுக்கு தான் இந்த வாரத்துடன் எண்டு-கார்டு போட போகிறார்கள். ரஜினியின் நடிப்பில் வெளியான "முத்து" திரைப்படத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் வேலன் கேரக்டரில் நடிகர் சபரி நடித்து வருகிறார். வள்ளி கேரக்டரில் நடிகை கோமதி ப்ரியாவும், விசாலாட்சி கேரக்டரில் மலையாள நடிகை சோனா நாயரும், ராகவன் கேரக்டரில் நடிகர் சத்யாவும் நடித்து வருகின்றனர்.
Also Read : ஆண் பெண் நட்புக்கு தனி இலக்கணம் சொன்ன புது வசந்தம்!
2020-ஆம் ஆண்டு டிசம்பர் 7 முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் கிளைமேக்ஸ் எபிசோட் வரும் மே 7-ஆம் தேதி சனிக்கிழைமையன்று ஒளிபரப்பாக உள்ளது. என்ன தான் முத்து படத்தின் சீரியல் வெர்ஷன் என்றாலும், படத்தின் கதையை சிறிது கூட மாற்றாமல் அப்படியே சீரியலாக எடுத்து ஒளிபரப்புவதாக சோஷியல் மீடியாக்களில் விமர்சனம் எழுந்தது. நாளுக்கு நாள் சீரியலின் TRP ரேட்டிங்கும் குறைந்தது. இதற்கு மேல் சீரியலை இழுத்து சென்றால் சரியாக இருக்காது என்றெண்ணி வேலைக்காரன் சீரியலை இந்த வாரத்தோடு முடிக்கிறார்கள்.
இதனிடையே வேலைக்காரன் சீரியல் முடிய போவதை நினைத்தால் வருத்தமாக இருப்பதாகவும், அதே சமயம் கிளைமேக்ஸ் எபிசோட்-ஐ காண ஆவலாக இருப்பதாகவும் இந்த சீரியலின் தீவிர ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.