• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யாருப்பா அந்த முத்தழகு? புதிய சீரியலை களமிறக்கும் விஜய் டிவி!

யாருப்பா அந்த முத்தழகு? புதிய சீரியலை களமிறக்கும் விஜய் டிவி!

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ள இந்த சீரியல் எப்போது முதல் எந்த நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது என்பது பற்றிய தகவல்

  • Share this:
    கிராமத்து கதைக்களத்துடன், புத்தம் புதிய முகங்களுடன் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்ப உள்ள இந்த சீரியலுக்கு "முத்தழகு" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும் பல நிகழ்ச்சிகள் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வந்தாலும், இன்று வரை சீரியல்களை அடித்து கொள்ள வேறு எந்த ஷோக்களும் இல்லை என்பதே உண்மை. மெகா சீரியல்களை விரும்பாத சின்னத்திரை ரசிகர்களே இல்லை எனலாம். எனவே அனைத்து வயதினரும் ரசித்து பார்க்கும் படியான சீரியல்களை போட்டி போட்டு கொண்டு தமிழ் டிவி சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. சென்ட்டிமெண்ட், அழுகை, சோகம் என்று போய் கொண்டிருந்த சீரியல்களின் ட்ராக்கை, டீனேஜர்ஸ் மகிழ்ந்து பார்க்கும்படி தனி டிரென்டிங்காக மாற்றியதில் பெரும்பங்கு விஜய் டிவி-யை சேரும்.

    காலை முதல் இரவு வரை பெரும்பாலும் அனைத்து முன்னணி டிவி சேனல்களும் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. இதற்கு விஜய் டிவி-யும் விதிவிலக்கு அல்ல. எங்கும் எதிலும் புதுமை என்பதை மந்திரமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டார் விஜய் டிவியில், திரைப்படங்களின் பெயர்களை தாங்கி வரும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. பொதுவாக ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெறுவது வழக்கம்.

    அந்த மனசு தான்யா கடவுள்.. சிகிச்சை முடிந்த கையுடன் பொதுசேவையில் இறங்கிய நமீதா மாரிமுத்து!

    ஆனால் பிற்பகல் முதல் இரவு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் ஹிட் லிஸ்ட்டில் இருப்பது ரசிகர்கள் மத்தியில் சேனலின் சீரியல்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டுகிறது. இப்படி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற சீரியல்களின் சேனலாக இருந்து வரும் விஜய் டிவி-யில் விரைவில் புதிய மெகா சீரியல் ஒன்றி களமிறக்கப்பட இருக்கிறது. இதற்கான ப்ரமோ வீடியோவை விஜய் டிவி தனது அதிகாரபூர்வ சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து இருக்கிறது.

    கிராமத்து கதைக்களத்துடன், புத்தம் புதிய முகங்களுடன் விரைவில் ஒளிபரப்ப உள்ள இந்த சீரியலுக்கு "முத்தழகு" என்று பெயரிடப்பட்டு உள்ளது. விவசாய பின்னணி கொண்ட கிராமத்து கதையாக காட்டப்படும் இந்த சீரியலின் ப்ரமோவில், கடன் வாங்கி இருக்கும் கிராமத்து பெண்மணியான நாயகிக்கு சொந்தமான காளை மாடுகளை கடன் கொடுத்தவர்கள் வந்து ஒட்டி செல்கின்றனர். இதை தடுத்து நிறுத்த போகும் நாயகியிடம், கடனை கொடுத்து விட்டு காளைகளை இழுத்து செல்ல சொல்கின்றனர்.



    காளைகள் இன்றி தொடர்ந்து விவசாய பணிகளில் ஈடுபடும் நாயகி முத்தழகு, தனக்கு தானே ஏர் பூட்டி கொண்டு நிலத்தை உழும் வேலையில் வியர்வை சிந்த ஈடுபடுகிறார். இந்த மண்ணை நேசிக்கும் முத்தழகின் விதியை மாற்ற சாமி கண்ணை திறப்பாரா என்ற ஏக்கத்துடன் காரில் இருந்து இறங்கி பார்க்கிறார் நாயகனின் தாய். கூடவே நாயகனும் இருக்கிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ள இந்த சீரியல் எப்போது முதல் எந்த நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: