ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கண்ணே கலைமானே! சீரியல் பாட்டா இது? கேட்போரை உருக வைத்த ’வைக்கம் விஜயலட்சுமி’!

கண்ணே கலைமானே! சீரியல் பாட்டா இது? கேட்போரை உருக வைத்த ’வைக்கம் விஜயலட்சுமி’!

வைக்கம் விஜயலட்சுமி

வைக்கம் விஜயலட்சுமி

காதலையும், வாழ்க்கையை தேடும் வலியையும் தன் குரலில் தனக்கே உரித்தான உணர்வுடன் பாடியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவியில் வெளியாக இருக்கும் கண்ணே கலைமானே தொடருக்கான பாடலை பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார்.

  வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரையும் போட்டிப்போட்டுக்கொண்டு ரசிகர்களை கவரத்தொடங்கிவிட்டது. அழுகாட்சி காவியம் என்றெல்லாம் சீரியலை கலாய்த்த காலம்போய் தற்போது காதல், காமெடி, ரொமான்ஸ், பாடல் என ஒரு சின்ன திரைப்படமாகவே ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு ஏற்ப நாளுக்கு நாள் வயது வித்தியாசம் இன்றி ரசிகர்களும் சின்னத்திரைக்கு அதிகரித்து வருகின்றனர். அந்தவகையில் அக்டோபர் 10 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஒரு சீரியல்தான் கண்ணே கலைமானே.

  பார்வையற்ற நாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சீரியலின் பாடலை பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். காலம் எழுதும் கதையில, என்ன நடக்கும் தெரியல, கண்ணே கலைமானே எனத் தொடங்கும் இந்தப்பாடலில் காதலையும், வாழ்க்கையை தேடும் வலியையும் தன் குரலில் தனக்கே உரித்தான உணர்வுடன் பாடியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி. சீரியலின் ப்ரோமா மட்டுமே தற்போது வெளியாகியுள்ள நிலையில் சில நொடி பாடலே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பாடல் மிகவும் இனிமையாக உள்ளதாக பலரும் பதிவிட்டு சீரியல் ப்ரோமோவை ஷேர் செய்து வருகின்றனர்.

  ' isDesktop="true" id="814163" youtubeid="jr3UZTO_xtc" category="television">

  ஜேசி டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி. பார்வை குறைபாடு உடையவரான வைக்கம் விஜயலட்சுமியின் குரலுக்கு உருகாதவர் எவருமே இல்லை. சொப்பன சுந்தரி நான் தானே பாடல், ஜெய்பீம் படத்தில் அனைவரையும் கலங்க வைத்த மண்ணியே ஈரம் உண்டு போன்ற பல பாடல்களை பாடியவர் வைக்கம் விஜயலட்சுமி.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Vaikom vijayalakshmi