விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் முத்தழகு சீரியல் புரமோ ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. என்ன தான் சீரியலாக இருந்தாலும் இந்த உருட்டு ரொம்ப அந்நியாயம் என்கின்றனர் சீரியல் ரசிகர்கள். என்ன விவகாரம் அது? வாங்க பார்க்கலாம்.
ஒரு காலத்தில் சீரியல் என்றாலே அது சன் டிவி தான். அந்த அளவுக்கு சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தது. இந்த இடத்தை பிடிக்க எந்த சேனலாலும் முடியாது என கர்ஜித்த போது, காதல், நகைச்சுவை, சென்டிமெண்ட் என இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சீரியல் ரசிகர்களால் மாற்றியது விஜய் டிவி. ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமில்லை விஜய் டிவி சீரியல்களும் டி.ஆர்.பியில் கலக்க தொடங்கினர். சன் டிவி இருந்த இடத்தில் சில ஆண்டுகளுக்குள் விஜய் டிவி தன்னுடைய பெயரை எழுதியது. வித்தியாசமான நெடுந்தொடர்களால் மக்கள் விஜய் டிவி சீரியல்களை அதிகம் விரும்பி பார்க்க தொடங்கினர். ஆனால் கடந்த ஆண்டு விஜய் டிவிக்கு ராசியான ஆண்டாக அமையவில்லை.
இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை ஆட்டி வைக்கும் ஐஸ்வர்யா!
விஜய் டிவி சீரியல்களில் உச்சபட்ச நட்சத்திரமாக இருந்த நடிகர், நடிகைகள் திடீரென்று சீரியலை விட்டு விலகினார். இதனால் முன்னணி சீரியல்களும் ஆட்டம் கண்டனர். இந்த நேரத்தில் தான் சன் டிவி, சுந்தரி மற்றும் கயல் சீரியலை களத்தில் இறக்கியது. இந்த 2 சீரியல்களும் மக்களின் ஆதரவை பெற்று சீரியல் டி.ஆர்.பியில் முதல் 2 இடத்தில் இருக்கின்றன. அதற்கு அடுத்தப்படியாக தன் விஜய் டிவி சீரியல்கள் உள்ளன.
இந்நிலையில், விட்டதை மீண்டும் பிடிக்க விஜய் டிவி பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தி பல புதிய சீரியல்களை களத்தில் இறக்கி வருகிறது. சமீபத்தில் முத்தழகு மற்றும் வைதேகி காத்திருந்தாள் என்று 2 புதிய சீரியலை ஒளிப்பரப்ப தொடங்கியது. இதில் முத்தழகு சீரியல் முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து துவங்கப்பட்டது. இந்த சீரியலின் புரமோ தான் தற்போது ரசிகர்களின் ட்ரோலில் சிக்கியுள்ளது.
கதைப்படி இப்போது முத்தழகுக்கு பூமிநாதன் உடன் விருப்பமில்லாத திருமணம் நடந்து விட்டது. இதில் பூமி நாதன் ஃபாரினில் படித்து வளர்ந்த பிள்ளை. அம்மாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு முத்தழகுக்கு தாலி கட்டுகிறார். முத்தழகு அப்படியில்லை கிராமத்தில் வளர்ந்து சிலம்பாட்டம், கம்பு சுத்துவது, என அனைத்தும் அவருக்கு அத்துப்பிடி. இந்த நேரத்தில் தான் ஊரில் பொங்கல் விழா தொடங்குகிறது. பூமிக்கு சிலம்பம் சுத்த தெரியாததால் அவரை வில்லன் கலாய்க்க, முத்தழகு ஒரே நாள் இரவில் பூமிக்கு சிலம்பம் சுத்த சொல்லி தருகிறார். இந்த ஒரு நாள் இரவில் முத்தழகிடம் சிலம்பம் கற்றுக் கொண்ட பூமி, வில்லன்களை டித்து தும்சம் செய்கிறார். இந்த உருட்டை தான் ரசிகர்கள் கலாய்த்து தள்ளுகின்றனர். சீரியல் என்றாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா? என்கின்றனர் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, TV Serial Promos, Vijay tv