• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உண்மையை சொன்ன கண்ணம்மாவுக்கு பளார் விட்ட சவுந்தர்யா!

உண்மையை சொன்ன கண்ணம்மாவுக்கு பளார் விட்ட சவுந்தர்யா!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் வாய் விட்டு கத்தி அழுகிறாள் கண்ணம்மா.

  • Share this:
     பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் எல்லா உண்மையையும் தெரிந்து கொள்ளும் கண்ணம்மாவுக்கு சவுந்தர்யா கையால் அடியும் கிடைக்கிறது.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஏகப்பட்ட திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 8 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்து போன கதையை மீண்டும் தோண்டி எடுக்கிறாள் கண்ணம்மா. பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்த விஷயமே இவ்வளவு நாள் கண்ணம்மாவுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் டாக்டர் ஒருவர் கண்ணம்மாவை பார்த்து உன் வயிற்றில் இருந்தது இரட்டை குழந்தை உண்மை சொல்ல, அந்த நாளிலிருந்து குழந்தையை தேடி அலைகிறாள் கண்ணம்மா. பாரதி, சவுந்தர்யா, துளசி என தனக்கு தெரிந்த எல்லோரிடமும் உதவி கேட்டவளுக்கு ஏமாற்றமே மிச்சம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வெண்பா, கண்ணம்மாவை வைத்து கேம் ஆடுகிறாள்.

    இது தெரியாமல் வெண்பாவை நம்பி விவாகரத்தில் கையெழுத்திட கண்ணம்மா முடிவு எடுத்துவிட்டாள். 8 வருடம் கழித்து கண்ணம்மாவை நிரந்தரமாக பிரிய வேண்டும் என்று பாரதியும் முடிவு எடுத்துவிட்டான். அதற்கு கண்ணம்மாவின் சித்தி பாக்கியலட்சுமியிடம் உதவி கேட்டு இருக்கிறான் பாரதி. நேற்றைய தினம் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து மிகப் பெரிய விஷயத்தில் கூடிய விரைவில் நல்ல முடிவு கிடைக்க போவதாக சுத்தி வளைத்து சவுந்தர்யா காதில் போட்டுவிட்டான். பாரதியின் நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட சவுந்தர்யா தற்செயலாக கண்ணம்மா வீட்டுக்கு போகிறார்.

    அங்கு தான் கண்ணம்மாவுக்கு மிகப் பெரிய உண்மை தெரிய வருகிறது. வீட்டுக்கு வரும் சவுந்தர்யாவிடம் பேத்தி லட்சுமி கண்ணம்மாவுக்கு ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறுகிறாள். இதனால் கண்ணம்மாவை சவுந்தர்யா விசாரிக்க, அவள் விவாகரத்தில் கையெழுத்திட முடிவு எடுத்திருப்பது அவருக்கு தெரிய வருகிறது. இதனால் கோபத்தில் கண்ணம்மாவை அடித்து விட்டு பாரதிக்கு ஃபோன் செய்கிறார். ஆனால் பாரதிக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என கண்ணம்மா தடுக்க, “அப்ப ஏன் இந்த முடிவு” என்று கேள்வி கேட்கிறார்.

    மாமியாருக்கும் மருமகளுக்கும் வார்த்தை போர் முட்ட, குழந்தைக்காக தான் இந்த முடிவை எடுப்பதாக கண்ணம்மா போட்டு உடைக்கிறாள். அதிர்ச்சியில் சவுந்தர்யா, குழந்தையை பற்றி கவலை வேண்டாம் அவள் நன்றாக இருக்கிறாள் என வார்த்தை விட கண்ணம்மா, சவுந்தர்யாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு உலுக்கி எடுக்கிறாள். தாங்க முடியாமல் சவுந்தர்யா “ஹேமா தான் உன் குழந்தை” ன்னு உண்மையை போட்டு உடைகிறார். அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் வாய் விட்டு கத்தி அழுகிறாள் கண்ணம்மா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: