ஈரமான ரோஜாவே சீசன் 2 ஆனது கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்; ஆனால் முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்தை கொண்டது. இந்த தொடரில் ஜீவாவாக பிரபல சீரியல் நடிகர் திரவியம் ராஜ்குமாரன் நடிக்கிறார், அவரது மனைவி ப்ரியா கதாபாத்திரத்தில் சுவாதி கொண்டே நடிக்கிறார். மேலும் ஜீவாவின் முன்னாள் காதலியாகவும், ஜீவாவின் அண்ணன் பார்த்திபனின் மனைவியாகவும் நடிகை கேப்ரியல்லா, காவ்யா என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் குமரன் நடிக்கிறார்.
சூழ்நிலை காரணமாக, ஜீவா காதலித்த காவ்யாவை ஜீவாவின் அண்ணன் பார்த்திபன் திருமணம் செய்து கொள்கிறார் மற்றும் ஜீவாவோ வேறு வழியே இல்லாமல் காவ்யாவின் சொந்த அக்காவான ப்ரியாவை திருமணம் செய்து கொள்கிறார். இதன் காரணமாக இரண்டு புதுமண தம்பதிகளுமே, ஒருவருடன் ஒருவர் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதில் சிக்கல்களையும், மன உளைச்சல்களையும் எதிர்கொள்கின்றனர்.
ஒருபக்கம் காவ்யா, ஜீவா உடனான காதலை மறக்க முடியாமல், "படிக்க வேண்டும்.. கிளாஸ் இருக்கு.. டெஸ்ட் இருக்கு!" என்று கூறி, பார்த்திபன் உடனான மணவாழ்க்கையை ஏற்க மறுக்கிறாள். மறுபக்கம் ஜீவாவோ, காவ்யாவை மறக்க முடியாமல், நடந்தது எதையுமே ஏற்க முடியாமல், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார் மற்றும் ப்ரியாவுடன் ஒரே அறையில் இருக்க முடியாமல் மொட்டை மாடியில் படுத்து தூங்குகிறார். இதற்கிடையில் வெளியாகி உள்ள ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோவானது, "நான் ஒரு பெண்ணை லவ் பண்ணேன்" என்கிற உண்மையை ஜீவா, ப்ரியாவிடம் சொல்வதை வெளிப்படுத்துகிறது.
Also Read : ராதிகாவுக்கு விருது வாங்கி தந்த காமெடி நடிகர் இயக்கிய படம்!
ஜீவாவின் நடவடிக்கைகளை கண்டு, ஒருகட்டத்தில் பொறுமை இழக்கும் ப்ரியா, "ஏன் இப்படி குடித்து உடம்பை கெடுத்து கொள்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தான் பிரச்சினை? என்னை மனைவியாய் ஏற்றுக்கொள்ள முடியாது தான், ஒரு தோழியாக கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், இந்த பந்தத்திற்கு என்ன அர்த்தம்? என்று கேட்டு தன் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து காட்டுகிறாள். "எதோ ஒன்று உங்களை என்னிடம் நெருங்க விடாமல் தடுக்கிறது.
அது என்னவென்று எனக்கு தெரிந்தே ஆகவேண்டும். அதை வைத்து தான் நான் இந்த வீட்டில் இருக்க வேண்டுமா? வேண்டாமா என்பதை என்னால் முடிவு செய்ய முடியும்!" என்று ஜீவாவை நெருக்கடிக்குள் தள்ளுகிறாள் ப்ரியா. வேறு வழி இல்லாமல், கண்கலங்கியபடியே "நான் ஒரு பெண்ணை லவ் பண்ணேன்!" என்று ப்ரியாவிடம் கூறுகிறான் ஜீவா. அதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறாள் ப்ரியா.
Also Read : நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து - பிரபல இயக்குனர் பகீர் பதிவு
இத்துடன் வெளியான ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது. தான் காதலித்த அந்த பெண், உன் தங்கை காவ்யா தான் என்று ப்ரியாவிடம் ஜீவா கூறுவானா? அல்லது தனக்கு காதல் தோல்வி; அதனால் தான் குடிக்கிறேன்; உன்னை விட்டு விலகியே இருக்கிறேன் என்று மேலோட்டமாக கூறி, நிகழும் பிரச்சனைகளுக்கு தற்காலிகமாக தீர்வளிப்பானா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.