ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் டிவி டாப் சீரியலுக்கு இப்படியொரு நிலைமையா? பாரதி கண்ணம்மாவுக்கு வந்த சோதனை!

விஜய் டிவி டாப் சீரியலுக்கு இப்படியொரு நிலைமையா? பாரதி கண்ணம்மாவுக்கு வந்த சோதனை!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மா வீட்டில் தங்கி இருக்கும் பாரதிக்கும் கண்னம்மாவுக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ் சீன்கள் நிகழ்கின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவியில் டாப் சீரியலாக இருக்கும் பாரதி கண்ணம்மாவில், இந்த வாரத்தில் மட்டுமே ஏகப்பட்ட ட்விஸ்டுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

  பாரதி கண்ணம்மா சீரியல் சமீபத்தில் டி.ஆர்.பியில் மிகப் பெரிய அடியை வாங்க, சீரியல் குழு இந்த வாரம் எப்படியாவது அதை சரிசெய்ய வேண்டும் என்று ரொமான்ஸ் ரூட்டை கையில் எடுத்துள்ளது. ஒருகாலத்தில் எப்படி ஓடிக் கொண்டிருந்த சீரியலுக்கு ரோஷினி விலகலுக்கு பின்பு இப்படியொரு நிலைமையா? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இந்த ஃபார்மூலா கண்டிப்பாக வொர்கவுட் ஆகும் என இயக்குனர் பிரவீன் நம்புகிறார்.

  கணவன் மனைவியான பாரதி, கண்ணம்மா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 8 வருடங்களாக இவர்களின் பிரிவுக்கு காரணம் வில்லி வெண்பா தான். வெண்பா, பாரதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு கண்ணம்மா மீது அவதூறு பரப்பினார். இதனை நம்பிய பாரதி, கண்ணம்மாவை கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். அன்று சூடுப்பிடித்த சீரியல் சென்ற மாதம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரோஷினி ஹரிப்ரியனின் விலகல் சீரியலின் கதையோட்டத்தை மாற்றியது. இதனால் புது கண்ணம்மாவாக வினுஷா சீரியலில் அறிமுகம் ஆகியுள்ளார். ஒரு அளவுக்கு இவரின் நடிப்பு பழைய கண்ணம்மாவை நினைவூட்டுகிறது.

  இந்நிலையில் சீரியலில் தற்போது ரொமான்ஸ் ரூட் ஆரம்பமாகியுள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் புரமோவும் வெளியாகியுள்ளது. கோர்ட் உத்தரவு படி பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் 6 மாதம் சேர்ந்து வாழ வேண்டும். இதற்கு சம்மதம் தெரிவித்து பாரதி பொட்டி படுக்கையுடன் கண்ணம்மா வீட்டில் தங்கி இருக்கிறார்.

  ' isDesktop="true" id="628161" youtubeid="B8UM6zG4udQ" category="television">

  பாரதி இப்படி முடிவு செய்து இருப்பது வில்லி வெண்பாவுக்கு தெரியாது. ஒருவேளை வெண்பா இருந்திருந்தால் கண்டிப்பாக இது நடந்திருக்காது. வெண்பா ஜெயிலில் இருக்கிறார். இந்நிலையில் கண்ணம்மா வீட்டில் தங்கி இருக்கும் பாரதிக்கு கண்ணம்மா பற்றிய எண்ணம் மாற வேண்டும் என்பதே சவுந்தர்யாவின் ஆசை. இப்படி இருக்க,  பாரதிக்கும் கண்னம்மாவுக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ் சீன்கள் நிகழ்கின்றன. இதை வைத்து அடுத்த 1 வாரத்திற்கு சீரியல் ரசிகர்களை கவர்ந்து விடலாம் என சீரியல் குழு முடிவு செய்துள்ளது. இதன் முடிவு என்ன என்பது இந்த வார இறுதியில் தெரிந்து விடும். சீரியல் ரேட்டிங்கை பொறுத்து இதே ரூட் ஃபலோ ஆகுமா இல்லையா? என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Vijay tv