அந்த சேனலுக்கு போன விஜய் டிவி சீரியல் நடிகை... விஷயம் தெரியுமா?

சீரியல் நடிகை தீபா

ரசிகர்களின் மனம் கவர்ந்த பல சீரியல்களை ஒளிபரப்பி வரும் சேனலாக இருந்து வருகிறது கலர்ஸ் தமிழ்.

 • Share this:
  சீரியல் நடிகை தீபா தனது புதிய ப்ராஜெக்டான அம்மன் சீரியல் மூலம் பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளதாக கூறி உற்சாகம் தெரிவித்து இருக்கிறார்.

  ரசிகர்களை மிகவும் கவர்ந்த பக்தி சீரியலான அம்மனில் ஒரு பகுதியாக இருப்பதில் தான் இணைந்திருப்பது குறித்த மகிழ்ச்சியை இன்ஸ்டா மூலம் வெளிப்படுத்தி இருகிறார் நடிகை தீபா. கதையின் படி, ராஜராஜேஸ்வரி (தீபா) ஒரு பணக்கார நில உரிமையாளரின் மனைவி மற்றும் துர்கா என்பவரின் தாயாக காட்டப்படுகிறார். அவர் வசிக்கும் கிராமத்தில் ஒரு சக்திவாய்ந்த பெண்ணாக தீபா தோன்றுகிறார்.

  ஏற்கனவே ரெக்க கட்டி பறக்குது மனசு, பகல் நிலவு, நாம் இருவர் நமக்கு இருவர், ஆண்டாள் அழகர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள தீபா நெகட்டிவ் கேரக்டரிலேயே பெரும்பாலும் நடித்துள்ளார். ஆனால் அம்மன் சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் தோன்றுகிறார். சின்னத்திரை ரசிகர்களிடையே பல ஆண்டுகளாக பிரபலமாக இருந்து வருகின்றன சீரியல்கள். எனவே முன்னணி தமிழ் சேனல்கள் அனைத்திலுமே நாள்தோறும் தவறாமல் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்படுகின்றன. அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல சீரியல்களை ஒளிபரப்பி வரும் சேனலாக இருந்து வருகிறது கலர்ஸ் தமிழ்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது தமிழ் சின்னதிரையில் சில பக்தி சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்களை பெரிதும் ஈரத்துள்ள பிரபல பக்தி சீரியலாக இருந்து வருகிறது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியல். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ரவி பிரியன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வருகிறது பக்தி சீரியலான அம்மன். சக்தி என்ற முக்கிய கேரக்டரில் பவித்ரா கவுடா மற்றும் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடிகர் அமல்ஜித், ஷாரதாவாக ஜெனிபர், தாமோதரனாக ஹரிஷங்கர் நாராயணன், மந்த்ராவாக நடிகை சந்திரிகா, காந்தாரியாக சுபா ரக்ஷா என முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்து வருகின்றனர்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Deepa Deepa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@deepa15081990)


  இந்நிலையில் மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் ஆகிய 2 சீரியல்களின் மகாசங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. இரவு 7 மணி முதல் 8.30 வரை இந்த மகாசங்கமம் ஒளிபரப்பாகிறது. இதில் தான் இணைந்துள்ளதாக சீரியல் நடிகை தீபா சோஷியல் மீடியா மூலம் தகவல் தெரிவித்து இருக்கிறார். கலர்ஸ் தமிழின் டிஆர்பி ரேட்டிங் அம்மன் சீரியல் டைமிங்கின் போது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், நடிகை தீபா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Deepa Deepa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@deepa15081990)


  இது தொடர்பாக இன்ஸ்டாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக கலைஞர்களுடன் தான் எடுத்து கொண்ட சில ஃபோட்டோக்களை ஷேர் செய்துள்ளார் நடிகை தீபா. என்னை இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் அம்மன் சீரியல் குடும்பத்தில் பார்க்கலாம். மறக்காமல் பார்த்து எங்களை சப்போர்ட் செய்ய வேண்டும். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள் எனக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

  தனது முந்தைய இன்ஸ்ட்டா போஸ்ட்டிலும் இத்தொடர் பற்றி கூறி உள்ள நடிகை தீபா, "எனது புதிய சீரியலான அம்மனில் நடிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன். இதுவரைக்கும் நீங்க உங்க லவ் அன்ட் சப்போர்ட்டை எனக்கும் என மகனுக்கும் கொடுத்தீங்க. விரைவில் டெலிகாஸ்ட் ஆகப்போற அம்மன் எபிசோட்களில் ராஜேஸ்வரி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். எனக்கு உங்க லவ் அன்ட் சப்போர்ட்டை எப்போதும் போல கொடுங்க என்று ரசிகர்களை கேட்டு கொண்டிருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: