ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் டிவி சீரியல்... ஹீரோயினால் தெரிய வந்த உண்மை!

அன்புடன் குஷி' சீரியல்

குஷி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷ்ரேயா சீரியல் முடிந்தது குறித்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ரசிகர்களின் பொழுதை மகிழ்ச்சியாக போக்க வைப்பதற்கு பல முன்னணி பிரபல சேனல்கள் போட்டி போட்டு கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

  அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த பிரபல முக்கிய பொழுதுபோக்கு சேனலாக இருக்கிறது ஸ்டார் விஜய் டிவி. எண்ணற்ற சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளது. மாலை நேரங்களில் சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி, மதிய நேரங்களில் கூட வீட்டிலிருக்கும் தாய்மார்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

  சமீபத்தில் கூட நம்ம வீட்டு பொண்ணு மற்றும் தென்றல் வந்து என்னை தொடும் உள்ளிட்ட இரு சீரியல்களை அடுத்தடுத்து ஒளிபரப்ப துவங்கி இருக்கிறது. இதனிடையே புதிதாக துவக்கப்பட்டுள்ள தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஒளிபரப்பாகி வரும் அதே நேரத்தில் கடந்த வாரம் ஒளிபரப்பான சீரியல் அன்புடன் குஷி. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 13 அன்றோடு முடிவடைந்துள்ளது. திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'அன்புடன் குஷி' சீரியல் ராஜஸ்தானை சேர்ந்த குடும்பத்தினரின் வீட்டில் வேலை செய்து வரும் ஹீரோ அன்பு.

  முதலாளியின் மகளான குஷி ஆகியோரை மையக்கருவாக வைத்து ஒளிபரப்பானது. இந்த சீரியலில் அன்பு கேரக்டரில் நடிகர் ப்ரஜின், குஷி கேரக்டரில் நடிகை ஷ்ரேயா அஞ்சன் நடித்தனர். இந்த சீரியல் துவங்கிய போது முதலில் குஷி கேரக்டரில் நடிகை மான்சி ஜோஷி நடித்தார். அதன் பின்னர் குஷி கேரக்டரில் நடித்தவர் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ். பின்னர் இவரும் மாற்றப்பட்டு கடைசியாக குஷி கேரக்டரில் நடித்து இந்த சீரியலை நிறைவு செய்துள்ளார் ஷ்ரேயா அஞ்சன். சில மாதங்களுக்கு முன்னர் 'அன்புடன் குஷி' சீரியல் வெற்றிகரமாக 300 எபிசோட்களை கடந்த நிலையில், 341-வது எபிசோடுடன் இந்த சீரியல் நிறைவு பெற்றுள்ளது.

  also read..ஆங்கராக தொடங்கிய பயணம்... விஜய் டிவியில் தொடர்ந்து பவித்ராவுக்கு லீட் ரோல் தர நிஜ காரணம்!

  ஜனவரி 27, 2020 அன்று முதல் ஒளிபரப்பாகி வந்த அன்புடன் குஷி, ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடி 341 எபிசோட்களுடன் முடிந்துள்ளது சீரியல் ரசிகர்களை சிறிது ஏமாற்றமடைய செய்துள்ளது. இதனிடையே இந்த சீரியலில் குஷி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷ்ரேயா அஞ்சன், சீரியல் முடிந்தது குறித்து உணர்ச்சிப்பூர்வமாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அத்துடன் ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Shreya Anchan 💫 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shreyaanchan_official)


  இது தொடர்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் மற்றும் சீரியல் குழுவினருடன் எடுத்து கொண்ட ஃபோட்டோக்களை இணைத்து வீடியோவாக ஷேர் செய்து இருக்கிறார். அதோடு "அன்புடன் குஷியின் மிக அழகான பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு ஒரு அற்புதமான பயணமாக இருந்தது. குஷியாக நான் நடித்ததற்கு அன்பும், ஆதரவும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

  இந்த அற்புதமான வாய்ப்பளித்த சீரியல் தயரிப்பு நிறுவனம், குழுவினர் மற்றும் vijay television-க்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். ஆதரவும், ஊக்கமும் அளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சக கலைஞர்களுக்கு அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றி. அன்புடன் குஷி டீமுடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் நினைவுகள் எப்போதும் சிறப்பு மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: