ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அனிருத் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜய் டிவி நடிகைகள் - வைரல் வீடியோ!

அனிருத் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜய் டிவி நடிகைகள் - வைரல் வீடியோ!

Serial Acresss

Serial Acresss

Actresses Viral Video | அனிருத் பாடிய இந்த பாட்டு சென்ற மாதம் யூடியூபில் ரிலீஸ் ஆனது. அப்போதில் இருந்தே பலர் இந்த பாடலுக்கு நடமாடி அந்த வீடியோவை இன்ஸ்டா ரீல்ஸில் பதிவிட்டு வந்தனர். இந்த பாடலுக்கு தான் விஜய் டிவியின் கதாநாயகிகள் சிறப்பாக ஆட்டம் போட்டுள்ளனர். அதே போன்று இந்த வீடியோவில் வினோத் மற்றும் சபரி ஆகியோரும் வேடிக்கையாக நடனமாடி உள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒவ்வொரு சீரியலும் சூப்பர் ஹிட் ஆவதற்கு அதிலுள்ள கதாநாயகன் மற்றும் கதாநாயகி ஆகியோரின் நடிப்பும், திறமையும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதே போன்று ரசிகர்களும் சீரியலில் நடிக்க கூடிய ஹீரோ மற்றும் ஹீரோயின் கதாபத்திரத்தை பெரும்பாலும் அதிகம் கவனித்து வருவார்கள். குறிப்பாக இளம் வயதினர் அந்த சீரியலில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் எந்த மாதிரி நடிக்கிறார்கள், எப்படிப்பட்ட உடை அணித்துள்ளார்கள், எந்த விதமான மேக் அப் செய்துள்ளனர் போன்றவற்றை கவனிப்பார்கள். அதே போன்று அவர்களை சமூக ஊடக பக்கங்களிலும் பின்தொடர்வார்கள்.

அப்படி ஃபாலோ செய்யும் போது அதில் அவர்கள் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சிறப்பாக இருந்தால் அதை உடனே வைரலாக்கி விடுவார்கள். இது போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. விஜய் டிவியின் பிரபலங்கள் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் பகிரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சீக்கிரத்திலேயே வைரலாகி விடுகிறது. தொலைக்காட்சி சேனல்களின் TRP ரேட்டிங்கில் முன்னிலை வகிக்க பலவித யோசனைகளை விஜய் டிவி செய்து வருகிறது. இவர்கள் செய்யும் புதுமையான விஷயங்கள் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

அதே போன்று விஜய் டிவியின் சீரியல்களில் நடித்து வரும் நாயகிகள் அவ்வப்போது இன்ஸ்ட்டா ரீல்ஸ் செய்து இணையத்தில் பகிர்வார்கள். இது நெட்டிசன்களின் கண்களில் பட்டதும் வைரலாகி விடும். அந்த வகையில் தற்போது விஜய் டிவி நாயகிகள் கூட்டாக நடனமாடிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Also Read : நாகினி நடிகை மௌனி ராயின் லேட்டஸ்ட் படங்கள்..

வெள்ளித்திரை கலைஞர்களுக்கு என்று பல விருது வழங்கும் விழாக்கள் எல்லா வருடமும் நடத்தப்பட்டு வரும். ஆனால், சின்னத்திரை கலைஞர்களுக்கு அந்தந்த சீரியல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் நடத்தினால் மட்டுமே இந்த திருநாள் அவர்களுக்கு உண்டு. அதன்படி, தற்போது விஜய் டிவியில் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதற்கான புரொமோ ஷுட் வேலைகள் சில வாரங்களுக்கு முன்னரே தொடங்கி விட்டது. இப்போது அதற்கான புரோமோ வீடியோக்களும் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விருது வழங்கும் விழாவை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த விருது வழங்கும் விழாவிற்கான புரொமோ ஷூட்டில் தான் ஒட்டுமொத்த சீரியல் பிரபலங்களும் இணைந்துள்ளார்கள். அதில் முன்னணி கதாநாயகிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து 'மயக்கிறியே சிரிக்கிறியே' என்கிற சூப்பர் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)அனிருத் பாடிய இந்த பாட்டு சென்ற மாதம் யூடியூபில் ரிலீஸ் ஆனது. அப்போதில் இருந்தே பலர் இந்த பாடலுக்கு நடமாடி அந்த வீடியோவை இன்ஸ்டா ரீல்ஸில் பதிவிட்டு வந்தனர். இந்த பாடலுக்கு தான் விஜய் டிவியின் கதாநாயகிகள் சிறப்பாக ஆட்டம் போட்டுள்ளனர். அதே போன்று இந்த வீடியோவில் வினோத் மற்றும் சபரி ஆகியோரும் வேடிக்கையாக நடனமாடி உள்ளனர். இந்த வீடியோவை விஜய் டிவி ரசிகர்கள் பலர் பார்த்து வருகின்றனர். அதே போன்று பலர் இந்த வீடியோ குறித்தும், அவர்களின் சிறப்பான நடனம் குறித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: TV Serial, Vijay tv, Viral Video