Home /News /entertainment /

விஜய் டிவி நடிகை ராஷ்மி சொன்ன குட் நியூஸ்!

விஜய் டிவி நடிகை ராஷ்மி சொன்ன குட் நியூஸ்!

ராஷ்மி ஜெயராஜ்

ராஷ்மி ஜெயராஜ்

Naam Iruvar Namaku Iruvar : சன் டிவி சீரியல் தோல்வியைத் தொடர்ந்து விஜய் டிவியில் நாமிருவர் நமக்கிருவர் தொடரில் நாயகியாக நடித்தார். அந்த சீரியலில் அவரின் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. Rashmi jayaraj

மேலும் படிக்கவும் ...

விஜய் டிவி சீரியல்களில் நடித்து கொண்டிருந்தவர் ராஷ்மி ஜெயராஜ். கர்நாடகாவை சேர்ந்த இவர், கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் `விதி’ என்னும் சன் டிவி சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். விதி என்னும் சீரியல்  ரசிகர்களை கவரவில்லை என்பதால் ஒரு வருடம் கூட ஓடாமல், 207 எபிசோடுகளோடு நிறைவு பெற்றது.


சன் டிவி சீரியல் தோல்வியைத் தொடர்ந்து விஜய் டிவியில் நாமிருவர் நமக்கிருவர் தொடரில் நாயகியாக நடித்தார். அந்த சீரியலில் அவரின் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்த சீரியல் 579 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிப்பரப்பட்ட நிலையில், கொரோனா சூழல், லாக் டெளன் காரணங்களால் சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. நாயகிகளான ரக்‌ஷா, ராஷ்மி இருவருமே வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதால் படப்பிடிப்பி கலந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் கதையை மாற்றி சீசன் 2 ஆக மாற்றி, புது தொடராக ஒளிப்பரப்பி வருகின்றனர்.


இதற்கிடையில்  கன்னட மொழியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து வந்தார். அதுவும் லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு  ரேஷ்மி, ரிச்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வரமாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், விஜய் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.




Rashmi jayaraj
விஜய் டிவி நடிகை ராஷ்மி

`ராஜ பார்வை’ என்னும் விஜய் டிவியின் புது சீரியலில் கமிட் ஆனார் ராஷ்மி. கடந்த மார்ச் மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய `ராஜபார்வை’ தொடர் 200 எபிசோடுகளோடு திடீரென நிறுத்தப்பட்டது. கதை மெதுவாக நகர்ந்ததால் நிறுத்தப்பட்டுவிட்டதாக காரணம் சொல்லப்பட்டது.  ராஷ்மி மீண்டும் சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.


இதையும் படிங்க.. மீண்டும் குட்டி தேவதை! - நீலிமாவின் கர்ப்பகால பராமரிப்பு


இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இந்நிலையில் ராஷ்மி தன் இன்ஸ்டாவில் இன்று, தான் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் நல்ல சேதியை ரசிகர்களிடம் பகிர்ந்திருக்கிறார். ஒருபுறம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், ராஜ பார்வை சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டதற்கு ராஷ்மி சீரியலை விட்டு விலகியது தான் காரணமா என்று மற்றொரு புறம் கிசுகிசுத்து வருகின்றனர்.




உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: TV Serial, TV Serial Promos, Vijay tv

அடுத்த செய்தி