• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புதிய வெப் சீரிஸில் நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை!

புதிய வெப் சீரிஸில் நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை!

நடிகை அர்ச்சனா

நடிகை அர்ச்சனா

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

  • Share this:
விஜய் டிவி-யில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. மேலும் இந்த சீரியலில் பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் தேன்மொழி என்கிற தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அர்ச்சனா. இவர், ஒரு நடன ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

சென்னையை சேர்த்த இவருக்கு சிறு வயது முதலே நடனம் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே இவர் ஜீ தமிழில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர், மேலும் சில நடன போட்டிகளில் கலந்துகொண்ட இவர், சீரியல் பக்கம் திரும்பினார். நடன நிகழ்ச்சி மூலம் கிடைத்த வரவேற்பு இவருக்கு சீரியலிலும் ஆதரவை பெற்றுத் தந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலில் என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து, அதே விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கதாபாத்திரமான தேன்மொழி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஈராமான ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரை பார்வையாளர்கள் மத்தியில் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு ரசிகர் பட்டாளம் இன்னும் பெருகிக் கொண்டே தான் வருகிறது. இந்த நிலையில், இவர் அடுத்து எந்த சீரியலில் நடிக்க போகிறார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்னொரு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. இவர் இப்பொழுது வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இவர் தற்பொழுது இதழும் இதழும் இணையட்டும் என்ற வெப்சீரிஸில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் முழுக்க முழுக்க காதல் மற்றும் நகைசுவை கலந்த ஒரு கதையாக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வெப்சீரிஸ் ஏழு அத்தியாயங்களாக ஒளிபரப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also read... "நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான்"... சர்வைவர் ஷோவில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ருஷ்டியின் இன்ஸ்டா பதிவு!

அர்ச்சனா, டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். நிறைய வீடியோக்களை பதிவிட்டு ரசிர்களுடன் தொடர்பில் இருக்கிறார். சின்னத் திரையில், டான்ஸ், நடிப்பு என்று கலக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை புதிய வாய்ப்பாக வெப் சீரீஸில் நடிக்கும் ஒரு சூப்பரான வாய்ப்பை பெற்றுள்ளதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: