முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் டிவி-யின் பிரபல சீரியல் திடீர் நிறுத்தம்?

விஜய் டிவி-யின் பிரபல சீரியல் திடீர் நிறுத்தம்?

செந்தூரப்பூவே சீரியல்

செந்தூரப்பூவே சீரியல்

இந்த சீரியலில் கடந்த சில நாட்களாக மாயாஜாலம், மந்திரம் போன்ற காட்சிகள் இடம் பெற்று வருகின்றன.

  • Last Updated :

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ சீரியல் சில மாதங்களுக்கு நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விஜய் டிவி-யில் ரஞ்சித்தின் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘செந்தூரப்பூவே’. இதில் துரை சிங்கத்தின் முதல் மனைவி இறந்துப் போன அருணா கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து வருகிறார். துரை சிங்கத்தின் இரண்டாவது மனைவியாக ஸ்ரீநிதி நடிக்கிறார்.

குடும்ப பாங்கான கதைக்களத்தோடு ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கடந்த சில நாட்களாக மாயாஜாலம், மந்திரம் போன்ற காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. சிறப்பு கதாபாத்திரமாக இருந்த அருணா பாத்திரம், தற்போது பேயாக வந்து எதிராளியை பழி வாங்குவது போல கதை நகர்கிறது.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு செந்தூரப்பூவே சீரியல் நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வரும் அக்டோபர் 3-ம் தேதியிலிருந்து விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருப்பதால் தான் செந்தூரப்பூவே சீரியல் நிறுத்தப்படுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.




 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)



இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial