விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியல் விரைவில் முடிவடையவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் செந்தூரப்பூவே. இந்த சீரியலில் துரைசிங்கம் என்ற கேரக்டரில் நடிகர் ரஞ்சித் நடித்து வருகிறார். ரோஜா என்ற கேரக்டரில் நடிகை ஸ்ரீநிதி நடித்து வருகிறார். திரைப்பட பெயர்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது போலவே இந்த சீரியலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 5 காரணமாக சுமார் 3 மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூரப்பூவே மீண்டும் ஒளிபரப்பாக தொடங்கியது.
சூழ்நிலை காரணமாக ரோஜாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட துரை, அவர் ஏற்கனவே காதலன் மூலம் கர்ப்பமாக இருக்கும் உண்மை தெரிந்தும் ரோஜாவை மனைவியாக ஏற்று கொள்கிறார். இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்பதற்காக இருவருக்கும் குடைச்சல் கொடுக்கிறார்கள் ரோஜாவின் மாமாவும், துரையின் மாமா மகள் ஐஸ்வர்யாவும். விஜய் டிவி-யில் ஒளிபரபாகி வரும் சீரியல்களிலேயே மிகக் குறைந்த டி.ஆர்.பி ரேட்டிங்கை செந்தூரப்பூவே பெற்று வரும் காரணத்தால், இது விரைவில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.
விஜய்யை விட நான் பெரிய நடிகன் இல்லை - வியக்க வைத்த கே.ஜி.எஃப் 2 யாஷ்!
இதற்கிடையே விரைவில் விஜய் டிவி-யில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. அந்த புதிய சீரியலின் பெயர், சிப்பிக்குள் முத்து. வழக்கமாக பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்த அக்கா தங்கை கதை தான் இது. அக்கா, அம்மாவாக இருந்து தங்கையை பாதுகாத்து வளர்க்கும் கதை. ஆனால், தங்கை காதலித்தவனைத் திருமணம் செய்து கொள்ள, தன்னுடைய வாழ்க்கையை தானே பாழாக்கிக்கொள்ளும் அக்காவின் கதை தான் சிப்பிக்குள் முத்து. தங்கை தான் காதலித்தவனை கரம் பிடிக்க, அக்கா மனநலம் குன்றிய ஒருவரை திருமணம் செய்துக் கொள்கிறாள். ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘செல்லேலி காபுரம்’ என்ற தெலுங்கு சீரியலின் ரீமேக்கான இது விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
Dune Oscar 2022: 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ட்யூன்!
இந்த புதிய சீரியல் ஒளிபரப்பை தொடங்கவிருப்பதால், ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்டு போடவிருக்கிறார்களாம் சேனல் தரப்பினர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.