Home /News /entertainment /

உருவ கேலி.. அவமானங்களை தாண்டி காதலால் ஜெயித்த விஜய் டிவி சரத் - கிருத்திகா!

உருவ கேலி.. அவமானங்களை தாண்டி காதலால் ஜெயித்த விஜய் டிவி சரத் - கிருத்திகா!

 சரத் - கிருத்திகா!

சரத் - கிருத்திகா!

காதல் மனைவியின் துணையுடன் mr and mrs சின்னத்திரை சீசன் 3ல் டைட்டிலை வென்றதுடன் சரத் - கிருத்திகா ஜோடி 5 லட்சம் ரொக்கத்தையும் சொந்தமாக்கி இருக்கிறார்கள்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான mr and mrs சின்னத்திரை சீசன் 3ல் டைட்டில் வின்னராக கோப்பையை அடித்திருக்கும் சரத் - கிருத்திகா ஜோடிக்கு சின்னத்திரை பிரபலங்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பல்வேறு அவமானங்கள், கேலிகளுக்கு மத்தியில் இருவரும் இந்த வெற்றியை உரிதாக்கி இருக்கிறார்கள்

    விஜய் டிவி ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சரத்.சின்னத்திரை மொட்டை ராஜேந்திரன் என அன்போடு அழைக்கப்படும் சரத், விஜய் டிவி ஷோக்களில் தீனாவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமில்லை இதே விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அவர் நடித்திருக்கிறார்.

    விஜய் டிவியில் டி.ஆர்.பி மிஷினான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலந்து கொண்டார். இதுப்போல் சரத் இதுவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் டைட்டில் கார்டை வென்றது இல்லை. ஆனால் முதன்முறையாக காதல் மனைவியின் துணையுடன் mr and mrs சின்னத்திரை சீசன் 3ல் டைட்டிலை அடித்ததுடன் சரத் - கிருத்திகா ஜோடி 5 லட்சம் ரொக்கத்தையும் சொந்தமாக்கி இருக்கிறார்கள்.

    இந்த ஜோடியின் வெற்றி பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. mr and mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக யுவராஜ் - காயத்ரி, நந்தினி - யோகி ஜோடிகள் தான் என இணையத்தில் ஏகப்பட்ட கருத்துக்கள் உலா வந்து கொண்டிருந்தன. ஆனால் இளம் ஜோடிகளாக சரத் - கிருத்திகா இந்த டைட்டிலை வென்றனர். இவர்கள் இருவருக்கு 2021 ஜனவரியில் தான் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சரத்தின் லைஃப் அப்படியே மாறியது.

    தற்போது சின்னத்திரை சீரியலிலும் சரத் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சிம்புவின் சூப்பர் ஹிட் மாநாடு படத்திலும் சரத் முகம் காட்டியுள்ளார். இந்த வெற்றி மனைவியின் கிருத்திகாவால் தான் கிடைத்தது என பெருமையுடன் சரத் பதிவு செய்கிறார். இவரின் மனைவி கிருத்திகாவும் மீடியாவுடன் தொடர்புடையவர் தான். முறைப்படி கிளாகிக்கல் நடனம் கற்றவர். இதுவரை பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். கூத்து பட்டறை நிகழ்ச்சியிலும் இவரின் நடனம் பேசப்பட்டு இருக்கிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Krithika Sarath (@krithika_krish)






    இந்த ஜோடிகள் வலைத்தளத்தில் ஏகப்பட்ட உருவ கேலிகளையும் சந்தித்திருக்கிறது. கிருத்திகா சற்று குண்டாக இருப்பதால் இவர் நடனம் ஆட முடியுமா? என்ற கேலிகளும் நிறைய வந்தன. ஆனால் அவை எல்லாவற்றிற்கும் வெற்றி மூலம் முற்றுபுள்ளி வைத்துள்ளனர் இவர்கள். உருவம் மற்றும் தோற்றத்தை பொறுத்து ஒருவரின் திறமை சோதிக்கப்படாது என காட்டியுள்ளனர் சரத் - கிருத்திகா.mr and mrs சின்னத்திரை சீசன் 3ல் ஃபைனல்ஸில் இவர்களின் டான்ஸ் மொத்த போட்டியாளர்களை அழ வைத்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி