Vijay TV Rithika: இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற ரித்திகா!

ரித்திகா

ரித்திகாவின் ரசிகர்கள் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு விநியோகித்து இந்த மைல்கல்லை கொண்டாடினர்.

  • Share this:
    சீரியல் நடிகை ரித்திகா என்றழைக்கப்படும் தமிழ்செல்வி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றிருக்கிறார். இதுது குறித்து மகிழ்ச்சியடைந்த அவர், இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

    சில படங்களைப் பகிர்ந்த ரித்திகா, “நாங்கள் இப்போது 1 மில்லியன் பெரிய குடும்பம். என் மீது அன்பை பொழிந்து வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி... லவ் யூ ஆல்” எனத் தெரிவித்திருந்தார்.

    ரித்திகாவின் ரசிகர்கள் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு விநியோகித்து இந்த மைல்கல்லை கொண்டாடினர். இதனால் மிகவும் மகிழ்ந்துப் போனார் ரித்திகா. அந்த வீடியோவைப் பகிர்ந்த அவர், "ஓ மை காட்.. இந்த தூய்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பிற்காக உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.. என் வளர்ச்சியை உங்களுடையதாகக் கொண்டாடுகிறேன்.. எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைச் சுற்றி நல்ல இதயமுள்ளவர்களைக் கொண்டிருப்பதை நான் மிகவும் பாக்கியமாக உணர்கிறேன்... இந்த முயற்சியை மேற்கொண்டு, குழந்தைகளுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்புக்கு நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.

    தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா, அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ராஜா ராணியில் வினோதினி ஹரிஷ் கேரக்டரில் அவர் அறிமுகமானார். தவிர, குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் அவர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக கலந்துக் கொண்டு சில வாரங்களில் வெறியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: