மதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்!

மதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்!
நடிகை மதுமிதா
  • News18
  • Last Updated: August 21, 2019, 3:55 PM IST
  • Share this:
பிக்பாஸ் போட்டியாளரான நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.


அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சி குழு தெரிவித்தது.

கமல்ஹாசன் - மதுமிதா


இந்நிலையில் இன்று பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியே செல்லும்போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கெனவே ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒருநாள் ரூ.80000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பித் தருவதாக கூறியிருந்தோம்.இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் நடந்தது இதுதான்... மதுமிதாவின் முதல்பேட்டி

அதை அப்போது ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு நடிகை மதுமிதாவுக்கு ரூ.80,000 சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகை மதுமிதா, “விஜய் டிவியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால் எதையும் தெரிவிக்க முடியாது. ஆனால் தனக்கு தர வேண்டிய நிலுவை தொகை விஜய் டிவி தரவில்லை. இந்த புகாரை சட்டரீதியாக எதிர் கொள்வேன்” விளக்கமளித்துள்ளார்.

வீடியோ பார்க்க: தனுஷுடன் மோதலா? மனம் திறக்கும் ஜி.வி.பிரகாஷ்



வீடியோ பார்க்க: சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சிறுமிகள் மீட்பு...

First published: August 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்